ரிசர்வ் வங்கி மாநிலங்களின் நிதிநிலைமைகளில் உள்ள அபாயங்களை ஆராய்ந்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. அதில் 2022 - 23 நிதியாண்டில் இலவசங்களை அறிவித்துள்ள மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பஞ்சாப் முதலிடம், ஆந்திரா இரண்டாமிடம், ஜார்கண்ட் மூன்றாமிடம் பிடித்துள்ளது. தமிழகம் இடம்பெறவில்லை.
ஆர்.பி.ஐ., தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (சி.ஏ.ஜி.,) சமீபத்திய தரவுகளின்படி, மானியங்களுக்கான மாநில அரசுகளின் செலவு 2020 - 21ல் 12.9 சதவீதம் மற்றும் 2021 - 22ல் 11.2 சதவீதம் என வளர்ந்துள்ளது. இதற்கு இணையாக மாநிலங்களின் மொத்த வருவாய் செலவினங்களில் மானியங்களின் பங்கு 2019 நிதியாண்டில் 7.8 சதவீதமாக இருந்தது, 2021 நிதியாண்டில் 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. உதாரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் மானியங்கள் அதிக அளவில் உயர்ந்துள்ள முதல் ஐந்து மாநிலங்களாக ஜார்கண்ட், கேரளா, ஒடிசா, தெலுங்கானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை உள்ளன.
ரேஷன், கல்வி, சுகாதார திட்டங்கள் இலவசங்களல்ல!
![]()
|
அதே சமயம், இலவச மின்சாரம், இலவச குடிநீர், இலவச பொது போக்குவரத்து, நிலுவையில் உள்ள விவசாய கடன்கள் போன்றவற்றை தள்ளுபடி செய்வது ஆகியவை பெரும்பாலும் இலவசங்களாக கருதப்படுகின்றன. இது கடன் திரும்பி வரும் என்ற நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும். கிராஸ் சப்சிடைஷேசன் எனும் ஒன்றின் லாபத்தை எடுத்து மற்றொன்றுக்கு நிதியளித்து விலைகளை மாற்றுவதால் தனியார் முதலீட்டிற்கான ஊக்கம் குறையும். தற்போதைய ஊதிய விகிதத்தில் வேலையைத் தடுக்கும். இதனால் தொழிலாளர் பங்கேற்பு வீழ்ச்சியுறும்.
![]()
|
நடப்பு நிதியாண்டில் இலவசங்களின் மதிப்பீட்டை அறிய பட்ஜெட் உரை உட்பட பல்வேறு இடங்களிலிருந்து தகவல்களை திரட்டியதில், மாநிலங்களின் மொத்த உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி.,) இலவசங்களுக்கான செலவு 0.1 - 2.7 சதவிகிதம் வரை இருக்கிறது. ஆந்திரா மற்றும் பஞ்சாப் போன்ற அதிகக் கடனில் உள்ள சில மாநிலங்களில் இலவசங்களுக்கான செலவு ஜிஎஸ்டிபி.,யில் 2 சதவீதத்தைத் தாண்டியுள்ளன.
நிரந்தர அதிகாரம் பெறுவதை உறுதி செய்க!
இதனால் இலவசங்கள் வடிவில் உள்ள பல சமூக நலத் திட்டங்கள் மாநில கருவூலத்திற்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. மேலும் சந்தையிலிருந்து கடன் வாங்கியிருந்தால் அதுவும் அழுத்தம் ஏற்படுத்தும். எனவே மாநில அரசுகள் இலவசங்களுக்கான செலவினை மறு பரிசீலனை செய்து, பயனாளிகள் நிரந்தரமாக அதிகாரம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். அதன் மூலம் நீண்ட கால நன்மைகளை அடைய முடியும்.
சமூக நலத் திட்டங்களுக்கு காலக்கெடு!
![]()
|
2022ல் அதிக இலவசங்களை அறிவித்த மாநிலங்கள்
பஞ்சாப் அதன் மாநில மொத்த உற்பத்தியில் 2.7 சதவீதம் அளவிற்கு இலவசங்களை அறிவித்துள்ளது. அதன் சொந்த வரி வருவாயில் இது 45.4 சதவீதம்.
ஆந்திரா அதன் மாநில மொத்த உற்பத்தியில் 2.1 சதவீதம் அளவிற்கு இலவசங்களை அறிவித்துள்ளது. அதன் சொந்த வரி வருவாயில் இது 30.3 சதவீதம்.
ஜார்கண்ட் அதன் மாநில மொத்த உற்பத்தியில் 1.7 சதவீதம் அளவிற்கு இலவசங்களை அறிவித்துள்ளது. அதன் சொந்த வரி வருவாயில் இது 26.7 சதவீதம். இவ்வாறு கூறியுள்ளது.
தற்போது மத்திய அரசு ஜூன் 2022 உடன் முடிந்த மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி., இழப்பீடு காலக்கட்டத்தை 2026 வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இதனால் மாநில கருவூலங்களுக்கான சுமை குறைந்துள்ளது. அதனை ஆக்கப்பூர்வமாக செலவிட்டால் மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் இருக்கும்.
Advertisement