இது உங்கள் இடம்: இது திராவிட மாடல் அல்ல; விளம்பர மாடல்!| Dinamalar

இது உங்கள் இடம்: இது திராவிட மாடல் அல்ல; விளம்பர மாடல்!

Updated : ஜூலை 18, 2022 | Added : ஜூலை 18, 2022 | கருத்துகள் (58) | |
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்கே.எஸ்.தியாகராஜ் பாண்டியன், காரைக்குடியில் இருந்து எழுதுகிறார்: முதல்வர் ஸ்டாலின் மூச்சுக்கு 300 முறை, 'இது, திராவிட மாடல் அரசு' என்று முழங்கி வருகிறார். திராவிடர் கழகத்தில் இருந்து விலகி, எப்போது தேர்தல் அரசியலுக்கு அண்ணாதுரை வந்தாரோ, அன்றே திராவிட மாடல் காலாவதியாகி விட்டது. சமூக நீதி, கடவுள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்கே.எஸ்.தியாகராஜ் பாண்டியன், காரைக்குடியில் இருந்து எழுதுகிறார்:

முதல்வர் ஸ்டாலின் மூச்சுக்கு 300 முறை, 'இது, திராவிட மாடல் அரசு' என்று முழங்கி வருகிறார். திராவிடர் கழகத்தில் இருந்து விலகி, எப்போது தேர்தல் அரசியலுக்கு அண்ணாதுரை வந்தாரோ, அன்றே திராவிட மாடல் காலாவதியாகி விட்டது.latest tamil news

சமூக நீதி, கடவுள் மறுப்பு, பிராமண எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, தமிழ் வளர்ச்சி, தமிழர் நலன், மதச்சார்பின்மை போன்றவையே தி.மு.க.,வின் கொள்கைகள். உண்மையில் இந்த கொள்கைகளில் உறுதியாக இருக்கிறதா என்று பார்த்தால், கேள்விக்குறியே! சமூக நீதி பேசும் தி.மு.க.,வினர், தற்போதைய ஜனாதிபதி தேர்தலில், பழங்குடியின பெண் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்; ஆனால், உயர் ஜாதி யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கின்றனர்.இதிலிருந்தே, அவர்களின் சமூக நீதி போலியானது என்பதை அறியலாம். கடவுள் மறுப்பு கொள்கையிலும், தி.மு.க., தோற்று விட்டது. தி.மு.க.,வினரில் பெரும்பாலானோர் கோவில்களுக்கு சென்று சுவாமி கும்பிடுகின்றனர். ஏன் முதல்வரின் மனைவியே கோவில் கோவிலாக சுற்றி வருகிறாரே! பிராமண எதிர்ப்பு என்பது, ஹிந்துக்கள் இடையே ஜாதி போதையை ஏற்படுத்தி, அதன் வாயிலாக ஓட்டு அறுவடை செய்ய தி.மு.க., போடும் நாடகம் தான்.

உண்மையில் கருணாநிதியும் சரி, ஸ்டாலினும் சரி, தங்களது ஆட்சியில் பிராமண சமூக உயர் அதிகாரிகளையே, ஆலோசகர்களாக வைத்துள்ளனர். 350 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு, தி.மு.க.,விற்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர் பிராமணர் தானே!ஹிந்தி எதிர்ப்பு என்பது, தமிழக மக்கள் தேசிய அரசியல் குறித்த ஞானம் பெற்று விடக்கூடாது என்பதற்காக, பின்பற்றப்படும் யுக்தி.

தமிழக இளைஞர்கள் கும்மிடிபூண்டியை தாண்டக்கூடாது; முட்டாள்களாகவே இருக்க வேண்டும் என்பது தான், அவர்களின் எண்ணம். தமிழ் வளர்ச்சி என்று சொல்வர்; ஆனால், அந்தத் தமிழையே ஒழுங்காக சொல்லிக் கொடுக்காமல், 10ம் வகுப்பு தேர்வில், 47 ஆயிரம் மாணவர்கள் 'பெயில்' ஆகியுள்ளனர்.


latest tamil news


தமிழர் நலன் என்பர்; இலங்கையில் இறுதி கட்ட போரில், தமிழர்கள் செத்து மடிந்த போது உண்ணாவிரத நாடகமாடி, மத்திய அரசிடம் பேரம் பேசி, நல்ல வசதியான, பசையான இலாகாக்களை பெற்று பதவி சுகம் அனுபவித்தவர்கள் தி.மு.க.,வினர். இவர்களின் மோசடி வித்தைகளை, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...தற்போது தி.மு.க.,வினர் சொல்லும், 'திராவிட மாடல்' என்பதெல்லாம், போலியான விளம்பர மாடலே. இந்த விளம்பர மாடலை பின்பற்றுவதில், நம் முதல்வரை மிஞ்ச, இந்தியாவிலேயே யாரும் இல்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X