அனுமதியற்ற அரசு கட்டடங்கள் திறக்கப்படாது: மின் இணைப்பு பெறுவதில் சிக்கல்!

Updated : ஜூலை 18, 2022 | Added : ஜூலை 18, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
கோவை: கோவையில், முறையான திட்ட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பல்வேறு அரசு கட்டடங்களும், கட்டட நிறைவுச் சான்று இல்லாமல், மின் இணைப்பும் பெற முடியாமல் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கின்றன. அரசுத்துறைகளின் சார்பில் கட்டப்படும் எந்தக் கட்டடமாக இருந்தாலும், அதற்கும் முறையான திட்ட அனுமதி பெற வேண்டுமென, தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளில் தெரிவித்துள்ளது. ஆனால், இதை பெரும்பாலான
அனுமதியற்ற அரசு கட்டடங்கள், மின் இணைப்பு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: கோவையில், முறையான திட்ட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பல்வேறு அரசு கட்டடங்களும், கட்டட நிறைவுச் சான்று இல்லாமல், மின் இணைப்பும் பெற முடியாமல் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கின்றன.



அரசுத்துறைகளின் சார்பில் கட்டப்படும் எந்தக் கட்டடமாக இருந்தாலும், அதற்கும் முறையான திட்ட அனுமதி பெற வேண்டுமென, தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளில் தெரிவித்துள்ளது. ஆனால், இதை பெரும்பாலான அரசுத்துறைகள் மதிப்பதேயில்லை. முன், இவ்வாறு அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட எல்லாமே எளிதில் கிடைத்தன.



தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் வந்த பின், அதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. இந்த விதிகளின்படி, பொதுமக்கள் பயன்பாட்டுக்குரிய எந்தக் கட்டடமாக இருப்பினும், அதற்கு முறையான திட்ட அனுமதி வாங்கி, கட்டட நிறைவுச்சான்று சமர்ப்பித்தால் மட்டுமே, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பெற முடியும். இந்த விதியால், அனுமதியின்றி கட்டப்பட்ட ஏராளமான அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், மின் இணைப்புப் பெற முடியாமல் தவித்து வருகின்றன.



latest tamil news


உதாரணமாக, கோவை மாநகராட்சி சார்பில், ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோட்டில் 41.67 கோடி ரூபாய் மதிப்பிலான 'மல்டி லெவல் பார்க்கிங்', முறையான திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்டது. கட்டட நிறைவுச் சான்று கிடைக்காமல், மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இந்த பார்க்கிங்கை, கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் திறப்பதாக இருந்தது.


இதையடுத்து, கட்டடத்துக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு, மின் இணைப்பு வழங்குவதற்கான பூர்வாங்க பணிகள் நடக்கின்றன. ஸ்டாலின் வருகை ரத்து செய்யப்பட்டதால், திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதேபோன்று, சோமையம்பாளையம் ஊராட்சி சார்பில், மருதமலை அடிவாரத்தில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. அதற்கும் மின் இணைப்புப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சோமையம்பாளையம் ஊராட்சித் தலைவர் கொடுத்த கட்டட நிறைவுச் சான்றை மின் வாரியம் ஏற்க மறுத்து விட்டது.


இதுகுறித்து, ஊராட்சித் தலைவர் ரங்கராஜிடம் கேட்டதற்கு, ''முறைப்படி அனுமதி பெற்றே கட்டப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி முகமையின் ஒப்புதலுடன் நடந்த பணி என்பதால், அனைத்துமே அவர்கள்தான் கையாள்கின்றனர். நான் அளித்த கட்டட நிறைவுச் சான்றை மின் வாரியம் ஏற்கவில்லை; திட்ட அனுமதி கொடுத்தவர்களிடமே பெற்றுத்தர கூறினர். எனவே, அதற்கு முறைப்படி விண்ணப்பித்துள்ளோம்'' என்றார்.


மாவட்ட நகர ஊரமைப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'எங்கள் அலுவலகத்தில் திட்ட அனுமதி பெற்ற கட்டடங்களுக்கு மட்டுமே, நாங்கள் கட்டட நிறைவுச்சான்று தர முடியும். ஆர்.எஸ்.புரம் மல்டி லெவல் பார்க்கிங் கோப்பு, அரசின் மேல் முறையீட்டுக்குழுவுக்கு சென்றது; அங்கு அனுமதி அளித்துள்ளனர். மருதமலை பஸ் ஸ்டாண்ட் தொடர்பான கோப்பு, இதுவரை வரவில்லை. அரசு கட்டடமாக இருந்தாலும் முறைப்படி திட்ட அனுமதி பெற வேண்டியது அவசியம்' என்றனர்.


கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு அருகில், புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கும் நகர ஊரமைப்புத் துறையிடம் அனுமதி பெற்றதாகத் தெரியவில்லை. எனவே, இக்கட்டடத்துக்கும் மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,இந்தியா
18-ஜூலை-202215:39:57 IST Report Abuse
Hari அனுமதி எப்படி வாங்கணும் அத இலவசமாக எங்கு கிடைக்கும் என தெளிவாக சொன்னால் அனுமதி வாங்கிக்கலாம்,
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
18-ஜூலை-202212:03:17 IST Report Abuse
Nakkeeran அதற்க்கு தருமபுரி எம்பி மாதிரி பூமி பூஜை நிலையிலேயே தடுத்து நிறுத்தி இருக்கலாமே
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
18-ஜூலை-202211:58:25 IST Report Abuse
Raa இதுவரை அனுமதி கிடைக்காத கட்டிடங்களுக்கு மின் இணைப்பு தந்த அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X