வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 18) டிஸ்சார்ஜ் ஆனார்.
முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 12ம் தேதி கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் ஸ்டாலின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து உடற்சோர்வு இருந்ததால், கடந்த 14ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், வேகமாக குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முழுவதும் குணமடைந்த முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஒரு வார காலத்திற்கு அவர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு நேராக தலைமை செயலகம் சென்று ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளித்தார். அதன்பின்னர் தன் இல்லத்திற்கு திரும்புகிறார்.