திமுக அரசு வெட்கி தலைக்குனிய வேண்டும்: பழனிசாமி காட்டம்

Updated : ஜூலை 19, 2022 | Added : ஜூலை 18, 2022 | கருத்துகள் (54) | |
Advertisement
சென்னை: போலீசார் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, ‛இதற்கு இந்த திமுக அரசு வெட்கி தலைக்குனிய வேண்டும்' எனக் கூறியுள்ளார்.அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளித்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்தது
ADMK, Palanisamy, TNGovt, EPS, அதிமுக, பழனிசாமி, தமிழக அரசு, தலைக்குனிவு, இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: போலீசார் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, ‛இதற்கு இந்த திமுக அரசு வெட்கி தலைக்குனிய வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளித்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது, தமிழகம் அமைதி பூங்கா என்ற நம்பிக்கையை புரட்டிப்போட்டுவிட்டது என்றும், போலீசார் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை, சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு இந்த திமுக அரசு வெட்கி தலைக்குனிய வேண்டும்.


latest tamil news


மாணவி உயிரிழந்தது முதல் ஒரு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையெல்லாம் இந்த அரசு உளவுத்துறை மூலமாக தகவலை சேகரித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் வன்முறையை தவிர்த்திருக்கலாம். உளவுத்துறை செயலற்றுவிட்டது. அதனால் இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அரசின் அலட்சிய போக்கால் தான் வன்முறை நடந்துள்ளது. இப்போது எடுக்கும் நடவடிக்கைகளை முன்பே எடுத்திருந்தால் அசம்பாவிதங்களை தவிர்த்திருக்கலாம். அதனாலேயே செயலற்ற அரசு என்கிறோம். அதேபோல் அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்படி மனு கொடுத்தும் ரவுடிகளுக்கும், குண்டர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்து எங்கள் கட்சி அலுவலகத்திற்குள் நுழையவிட்டு வேடிக்கை பார்த்த அரசுதான் இது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
19-ஜூலை-202211:21:19 IST Report Abuse
Matt P ,,,,
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
19-ஜூலை-202207:05:54 IST Report Abuse
ravi இதேபோல் தான் அதிமுக அலுவலகத்திலும் கலவரம் ஏற்படும்வரை காவல்துறை வேடிக்கைப்பார்த்தது. இது ஒருவிதமான டெக்னீக். கலவரத்திற்கென்றே சில இத்துப்போன ரௌடிகட்சிகளும் ரௌடிகளும் இருக்கிறார்கள். அவர்களை உள்ளேவிட்டு திமுக வேடிக்கை பார்க்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே பரவலாக வலம் வருகிறது.
Rate this:
Cancel
aandaan - meloore,இந்தியா
19-ஜூலை-202206:50:46 IST Report Abuse
aandaan விடியல் அரசுக்கு விசுவாசம் உள்ள மீடியாக்கள் எல்லாம் தூங்கி விட்டனவா இல்லை ஒளிந்து விட்டார்களா? தெய்வத்தின் தீர்ப்பில் இருந்து எவரும் தப்ப முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X