பாதுகாப்புத்துறையில் ஏற்றுமதியாளராக முன்னேறியுள்ளோம்: மோடி பேச்சு

Updated : ஜூலை 18, 2022 | Added : ஜூலை 18, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் இறக்குமதி சுமார் 21 சதவீதம் குறைந்துள்ளது. பாதுகாப்பு துறையில் ஏற்றுமதியாளராக நாம் முன்னேறி வருகிறோம் என பிரதமர் மோடி பேசினார்.டில்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது, சுதந்திரத்திற்கு முன்பே இந்தியாவின் பாதுகாப்புத் துறை மிகவும் வலுவாக இருந்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் இறக்குமதி சுமார் 21 சதவீதம் குறைந்துள்ளது. பாதுகாப்பு துறையில் ஏற்றுமதியாளராக நாம் முன்னேறி வருகிறோம் என பிரதமர் மோடி பேசினார்.
latest tamil news
டில்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது, சுதந்திரத்திற்கு முன்பே இந்தியாவின் பாதுகாப்புத் துறை மிகவும் வலுவாக இருந்தது என்பது பலருக்குத் தெரியாது. இரண்டாம் உலகப் போரின்போது நாம்பாதுகாப்பு துறையில் ஒரு இறக்குமதியாளராக இருந்தோம்...


latest tamil newsபோதைக்கு அடிமையானவர்கள் போன்று நாம் சாதாரன பாதுகாப்பு பொருட்களுக்கு கூட வெளிநாட்டை சார்ந்து இருக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டோம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடிமையாகி கிடந்தோம்.


ஆனால் இன்று கடந்த 4-5 ஆண்டுகளில் குறுகிய காலத்தில், நமது பாதுகாப்பு இறக்குமதி சுமார் 21 சதவீதம் குறைந்துள்ளது... இதன் மூலம் நாம் முன்னர் பாதுகாப்பு இறக்குமதியாளராக இருந்து தற்போது பாதுகாப்புதுறை ஏற்றுமதியாளராக முன்னேறி வருகிறோம்.


அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் கடற்படைக்கு 75 உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவது முதல் படியாகும்; 100 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் நேரத்தில் இந்தியாவின் பாதுகாப்பை வரலாறு காணாத உச்சத்திற்கு கொண்டு செல்வதே இலக்காக இருக்க வேண்டும்.இவ்வாறு மோடி பேசினார்.latest tamil newsநிகழ்ச்சியில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், கப்பற்டை தலைமை தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூலை-202206:11:33 IST Report Abuse
Gopalakrishnan Sudhakar 0 ….
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
18-ஜூலை-202221:40:29 IST Report Abuse
Ramesh Sargam நீங்கள் செய்வது நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு நல்லது என்றாலும், ஒரு சில விஷக்கிருமிகள் உங்களை எப்பொழுதும் தூற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
vwhhwh -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூலை-202221:20:01 IST Report Abuse
vwhhwh govt should work on welfare, like poviding best amenities ,like good, food, shelter, dress, etc.,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X