உள்ளாடையை அகற்ற வற்புறுத்தல் 'நீட்' தேர்வு எழுதிய மாணவியர் புகார்

Updated : ஜூலை 19, 2022 | Added : ஜூலை 19, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
கொல்லம் : நாடு முழுதும் நேற்று முன்தினம் நடந்த 'நீட்' மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வில், கேரளாவில் ஒரு மையத்தில் மாணவியரின் உள்ளாடைகளை அகற்ற கட்டாயப்படுத்தியது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுதும் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில், கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள 'மார்தோமா
நீட் தேர்வு 2022, மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு, நீட் தேர்வு , NEET Exam 2022, Medical Education Entrance Exam, NEET Exam,


கொல்லம் : நாடு முழுதும் நேற்று முன்தினம் நடந்த 'நீட்' மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வில், கேரளாவில் ஒரு மையத்தில் மாணவியரின் உள்ளாடைகளை அகற்ற கட்டாயப்படுத்தியது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுதும் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில், கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள 'மார்தோமா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி'யில் அமைக்க-ப்பட்டு இருந்த மையத்தில், ஏராளமான மாணவியர் தேர்வு எழுதினர்.ஆனால், மாணவியர் தங்கள் உள்ளாடைகளை அகற்றிய பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.latest tamil news


இது, மாணவியருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. பலர் கண்ணீர் விட்டு அழுதனர். ஆனாலும் அதிகாரிகள் உறுதியாக இருந்ததால், உள்ளாடைகளை அகற்றி விட்டே தேர்வு எழுதச் சென்றனர். உள்ளாடைகளில் உலோக கொக்கிகள் இருப்பதால் அவற்றை அனுமதிக்க முடியாது என, சோதனை நடத்திய அதிகாரிகள் கூறினர்.இது தொடர்பாக, கடும் மன உளைச்சல் அடைந்த மாணவி ஒருவரின் தந்தை, கொல்லம் போலீசில் புகார் அளித்துள்ளார்.இது குறித்து, நீட் தேர்வு நடத்தும் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ranjani - san diego,யூ.எஸ்.ஏ
19-ஜூலை-202212:43:54 IST Report Abuse
ranjani பேன்டுல மெட்டல் ஜிப் இருந்தா....
Rate this:
Cancel
sai mahesh - coimbatore,இந்தியா
19-ஜூலை-202212:03:22 IST Report Abuse
sai mahesh வட இந்தியாவில் நீட் தேர்விற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை அங்கு தான் அதிகம் பாஸ், காபி, ஆள் மாறாட்டம் எல்லாம்
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
19-ஜூலை-202212:03:01 IST Report Abuse
Krishnamurthy Venkatesan ரொம்ப கேவலமாக இருக்கு. ரத்தம் கொதிக்கிறது. ஆனாலும் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X