வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ஆங்கிலேயர்களின் குரலாக தி.மு.க., பேசி வருவதாக, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:வேலுாரிலும், மதுரையிலும் பேசிய கவர்னர் ரவி, 'திராவிடம் என்பது நிலப்பரப்பு. திராவிடத்தை இனவாதமாக ஆங்கிலேயர்கள் தான் முதன்முதலில் குறிப்பிட்டனர்.
அது அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி' என்று, வரலாற்று உண்மையை உடைத்திருக்கிறார்.அதற்கு தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, 'திராவிடம் என்பது இனத்தை தான் குறிக்கிறது. ஆரியர்கள் தான் பிரிவினையை விதைத்தனர்' எனக் கூறியிருக்கிறார். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும், ஆங்கிலேயர்களின் குரலாக ஒலிக்க, ஒரு கட்சி இருக்கிறது என்பதற்கு, அவரது அறிக்கையே சாட்சி.இந்திய விடுதலைப் போராட்டம், 1900-ம் ஆண்டுகளின் துவக்கத்தில் பெரும் வேகம் பெற்றது.
![]()
|
தமிழகத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, பாரதியார், வ.வே.சு.அய்யர் போன்ற தலைவர்கள், இளைஞர்கள் மனதில் மூட்டிய சுதந்திரத் தீ, ஆங்கிலேயர்களை அச்சமூட்டியது.அடக்க முடியாமல் தவித்த ஆங்கிலேயர்கள், பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டனர். அதன் விளைவாக தோன்றிய நீதி கட்சி தான், திராவிடர் கழகமாகி, பின்னாளில் தி.மு.க.,வானது. திராவிட இனவாதம் மட்டுமல்ல, தி.மு.க., என்ற கட்சியே ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவாக உருவானது தான். நீதி கட்சியின் தோற்றம் என்பதே, வங்கப் பிரிவினை போன்றதொரு ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி தான்.
வெளிப்படையாக தனி நாடு கேட்டால், பிரிவினைவாதம் பேசினால், தி.மு.க., என்ற கட்சியே இருக்காது.கட்சி இல்லை என்றால் ஆட்சியும் இருக்காது. இதுவெல்லாம் தி.மு.க.,வுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் 'மாநில சுயாட்சி, மாநில உரிமை' என்ற போர்வையை போர்த்தி, அவ்வப்போது பிரிவினைவாதம் பேசுகின்றனர். அவர்களின் நோக்கம் இளைஞர்களின் மனதில் பிரிவினை என்ற நஞ்சை விதைப்பது தான். இதை புரிந்து தான், கவர்னர் உண்மையை பேசி வருகிறார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.