சென்னை : 'நீட் தேர்வு நடந்து கொண்டிருக்க இவங்க செஸ் ஆடிட்டு இருக்காங்க' என நடிகை கஸ்துாரி கிண்டல் செய்துள்ளார்.சமூக விஷயங்களில் அவ்வப்போது அதிரடி கருத்துக்களை கூறி வரும் கஸ்துாரி, தி.மு.க.,வின் தற்போதைய நிலைப்பாட்டை கிண்டலடித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: 'நீட் தேர்வு வராது; வரவிட மாட்டோம்' என சொல்லியே அன்று அனிதா உடைய உயிரை வாங்கியவர்கள் அதே வாக்குறுதியை சொல்லி ஓட்டும் வாங்கினர். இப்போது 'நீட்' தேர்வு அது பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் பாட்டுக்கு 'செஸ்' ஆடிக்கிட்டே, அடுத்த மரணத்தில் அரசியல் செய்ய போயாச்சு; என்ன மாடலோ? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதேபோல், 'கமல், சூர்யா, சத்யராஜ் போன்றோர் தற்போது ஸ்ரீமதி விவகாரத்தில் எங்கே போயினர்? காணவில்லை என விளம்பரம் தரலாமா மக்களே' என, சமூக வலைதளங்களில் பலரும் கலாய்த்து வருகின்றனர்.