தலைக்கு மேல் ஆபத்து: பரிதாப நிலையில் அரசுப்பள்ளி கட்டடங்கள்

Updated : ஜூலை 19, 2022 | Added : ஜூலை 19, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
பொள்ளாச்சி: மழை காலம் துவங்கியுள்ள சூழலில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் கட்டடங்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளதால், மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயில்கின்றனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 222 துவக்கப்பள்ளிகள், 56 நடுநிலைப்பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், 48 உள்ளன. இப்பள்ளிகளில், 25

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பொள்ளாச்சி: மழை காலம் துவங்கியுள்ள சூழலில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் கட்டடங்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளதால், மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயில்கின்றனர்.



latest tamil news




பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 222 துவக்கப்பள்ளிகள், 56 நடுநிலைப்பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், 48 உள்ளன. இப்பள்ளிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.இதில் பெரும்பாலான பள்ளிகளில், கட்டடம் முறையான பராமரிப்பின்றி உள்ளது. தற்போது, மழை காலம் துவங்கியுள்ள சூழலில், மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பலவீனமான கட்டடங்களில் மாணவர்கள் அச்சத்துடன் அமர்ந்து படிக்கின்றனர்.


ஒழுகும் கட்டடம்


தொப்பம்பட்டி துவக்கப்பள்ளி, 2004ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. புறவழிச்சாலை அமைக்கும் போது, இப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள், தலைமையாசிரியர் அறை, கழிப்பிடம் போன்றவை இடிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக கட்டடம் கட்டப்படவில்லை.
பள்ளி வளாகத்தில் உள்ள இரண்டு கட்டடம், பள்ளிக்கு எதிரே உள்ள இடத்தில் கட்டப்பட்ட மூன்று வகுப்பறை கட்டடமும் சிதிலமடைந்து காணப்படுகிறது. வராண்டாவில் உள்ள மேற்கூரை சிதிலமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆங்காங்கே, விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமென்றாலும் விழும் நிலையில் உள்ளது.


latest tamil news




மேலும், பள்ளி வகுப்பறை கட்டடங்களின் மேல்தளத்தில் தண்ணீர் தேங்கி, மழைநீர் கசிகிறது. இதனால், மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்க முடியாத சூழல் நிலவுகிறது. இந்த பள்ளியில், ஒன்றிய அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மட்டும் செய்கின்றனர். எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. குழந்தைகளின் நிலையை கண்ட பெற்றோர், முதல்வர் தனிப்பிரிவுக்கு பள்ளி கட்டடத்தை பராமரிக்க வேண்டும் என மனு அனுப்பியுள்ளனர். தற்போது மழை இடைவிடாமல் பெய்யும் சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.


விழும் அபாயம்


நெகமம் சின்னேரிபாளையத்தில், துவக்கப்பள்ளி பல ஆண்டுகளாக இரண்டு வகுப்பறை கொண்ட கட்டடத்தில் செயல்படுகிறது. மொத்தம், 20 குழந்தைகள் படிக்கின்றனர்.இந்த இரண்டு வகுப்பறை கட்டடம் முழுவதும் விரிசல் விட்டு சிதிலமடைந்துள்ளன. கட்டடம் எப்போது வேண்டுமென்றாலும் விழும் நிலையில் உள்ளது.
ஆபத்தான கட்டடத்தில் பாடம் நடத்த ஆசிரியர்களும், கல்வி கற்க மாணவர்களும் அச்சப்படுகின்றனர். கட்டடம் மோசமாக உள்ளது; சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் பராமரிக்க அதிகாரிகளுக்கு மனமில்லை.
தற்போது கட்டடத்தின் நிலை மிக மோசமாக உள்ளது. மழைப்பொழிவு உள்ள சூழலில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாற்று கட்டடத்தில் மாணவர்கள் கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.


latest tamil news





பாதுகாப்பை உறுதிபடுத்துங்க!


தொப்பம்பட்டி, சின்னேரிபாளையம் பள்ளிகளின் பரிதாப நிலை ஒரு சாம்பிள் தான். இதேபோன்று, கல்வி மாவட்டம் முழுவதும், ஏராளமான பள்ளி கட்டடங்கள் மோசமான நிலையில் உள்ளன.
பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு எடுத்து, சில கட்டடங்களை பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர். அலட்சியம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுத்தால், வீண் அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும்.
ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளின் நிலையை ஆய்வு செய்யும் அதிகாரிகள், புதிய கட்டடம் கட்டுவதற்கு திட்டமிட வேண்டும். அதுவரை, மாற்று கட்டடத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மோசமான நிலையில் உள்ள கட்டடங்களை இடித்து, புதிய கட்டடம் கட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
19-ஜூலை-202217:17:43 IST Report Abuse
DVRR இதைக்கேட்டால் வரும் பதில் இது அதிமுக காலத்தில் நடந்தது???வந்து 15 மாதம் ஆயிற்றே??இது வரை என்னய்யா
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
19-ஜூலை-202213:23:50 IST Report Abuse
Bharathi எங்கேயிருந்து பள்ளிக்கூடத்தை பத்தி கவலை படறது.
Rate this:
Cancel
Anvar - Singapore,இந்தியா
19-ஜூலை-202211:36:24 IST Report Abuse
Anvar அரசு பள்ளி கட்டடங்கள் இடிந்து விழுந்தால் ஒரு சத்தம் வரத்து அரசு பேருந்தில் ஊடல் ஒடிசல் ஒருந்தால் ஒரு பிரச்னை இல்லை ஆனால் தனியார் பள்ளிகளிலோ பேருந்து காலிலோ விபத்து ஏற்பட்டால் அமைச்சர்கள் பம்பரம் சுழல்வானுக காசு வாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X