கடந்த இரு வாரங்களாக இந்தியாவில் இருந்து தேயிலை இறக்குமதியை ரஷ்யா அதிகரித்துள்ளதால், தேயிலை விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. 2021-2022ம் ஆண்டில், இந்தியாவிலிருந்து 3.25 கோடி கிலோ தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் காரணமாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி தடைப்பட்டது.
ஆர்கானிக் பசுந்தேயிலை பிரகாசமான மற்றும் விறுவிறுப்பான சுவை கொண்டதாக அறியப்படுகிறது. அதேசமயம் சி.டி.சி தேயிலை, நன்கு அரைக்கப்பட்ட, வழக்கமான 5 செயல்முறைகளுடன், பால் கலக்காத தேநீருக்கு பயன்படுத்தப்படுவதால், சற்று கசப்பு தன்மையுடன் இருக்கும்.
![]()
|
தற்போது ரஷ்யாவில் உள்நாட்டு தேவை அதிகரித்துள்ள நிலையில், கடந்த இரு வாரங்களாக
இந்திய தேயிலை இறக்குமதியை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பசுந்தேயிலை விலை 50
சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. தரமான சி.டி.சி தேயிலை விலையும் 40 சதவீதம் அளவுக்கு
உயர்ந்துள்ளது.
![]()
|
இந்திய தேயிலை சங்கத்தின் தலைவர் நயன்தாரா பால்செளத்ரி கூறுகையில், "இன்னொரு முக்கிய தேயிலை ஏற்றுமதி நாடான ஈரானுக்கு ஏற்றுமதி தொடர்பான கட்டணச் சிக்கல்கள் இருப்பதால், இந்திய தேயிலைக்கான ரஷ்ய சந்தை மிகவும் முக்கியமானது. இந்தியாவின் தேயிலை ஏற்றுமதியில் சுமார் 18 சதவீதம் ரஷ்யாவிற்கு செல்கிறது” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement