சட்டவிரோதமாக கற்கள் வெட்டி கடத்தல் : தடுக்க முயன்ற டிஎஸ்பி படுகொலை

Updated : ஜூலை 19, 2022 | Added : ஜூலை 19, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுத்து கடத்தப்படுவதை தடுக்க முயன்ற டி.எஸ்.பி.,யை கடத்தல்காரர்கள் லாரி ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஹரியானா மாநிலம் நூஹ் என்ற மாவட்டத்தில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில், அருகேயுள்ள பச்கோவன் பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் குவாரியில் கற்கள் வெட்டி கடத்தப்படுவதாக டிஎஸ்பி சுரேந்திர
Haryana, Police Officer, Illegal Mining Check

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுத்து கடத்தப்படுவதை தடுக்க முயன்ற டி.எஸ்.பி.,யை கடத்தல்காரர்கள் லாரி ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலம் நூஹ் என்ற மாவட்டத்தில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில், அருகேயுள்ள பச்கோவன் பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் குவாரியில் கற்கள் வெட்டி கடத்தப்படுவதாக டிஎஸ்பி சுரேந்திர சிங் பிஷ்னோய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசாருடன், சுரேந்திர சிங் பிஷ்னோய் அங்கு சென்றார். அவர்களை கண்ட கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்களை மறித்த டிஎஸ்பி, பிடிக்க முயன்றார். அப்போது, ஒருவர் லாரியை அவர் மீது ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார். அவருடன் இருந்த போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கொலையாளியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil newsஇந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மனோகர் லால் கட்டார், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
20-ஜூலை-202200:59:17 IST Report Abuse
John Miller இதெற்கும் ஒரு மனுவை தூக்கிக்கொண்டு கவர்னர் மாளிகைக்கு அண்ணாமலை ஓட போகிறார்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-ஜூலை-202221:01:43 IST Report Abuse
Natarajan Ramanathan அந்த சட்டவிரோத குவாரியை நடத்துவதே காங்கிரஸ் ரௌடிதானாம். வட இந்திய ஊடகங்களில் விவாதம் நடக்கிறதே....
Rate this:
Cancel
19-ஜூலை-202220:32:50 IST Report Abuse
அப்புசாமி இதுதாண்டா ஹரியானா மாடல். போலீசை சுண்டெலி மாதிரி நசுக்கிட்டாங்க. எங்கே போனாரு தேஷ்பக்தர் அண்ணாமலை, அர்ஜுன் சம்பத், சைதை துரைசாமி, வானதி வகையறாக்கள்.
Rate this:
Neutral Umpire - Chennai ,இந்தியா
19-ஜூலை-202223:01:00 IST Report Abuse
Neutral Umpireஅப்புசாமிக்கு எதுக்கு வெறி... ராமாயணம் மகாபாரதம் பைபிள் திருக்குர்ஆன் மற்றும் அதீஸ் படியுங்கள்.. நஜாப் கர்பலா மெக்கா மெதினா வரலாறுகளை படியுங்கள் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X