பைக் மீது டிராக்டர் மோதல் மகனுடன் கர்ப்பிணி தாய் பலி

Added : ஜூலை 20, 2022 | |
Advertisement
செங்கம், செங்கம் அருகே, பைக் மீது டிராக்டர் மோதியதில், இரண்டு வயது மகனுடன் கர்ப்பிணி தாய் பலியானார்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தானகவுண்டன் புதுாரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜதுரை, 30; இவர் மனைவி மணிமேகலை, 25; இவர்களுக்கு, இரண்டு வயதான துரைமணி என்ற ஆண் குழந்தை உள்ளது.நேற்று காலை, 10:00 மணியளவில், குழந்தை துரைமணிக்கு தடுப்பூசி போட, மனைவியுடன் ராஜதுரை


செங்கம், செங்கம் அருகே, பைக் மீது டிராக்டர் மோதியதில், இரண்டு வயது மகனுடன் கர்ப்பிணி தாய் பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தானகவுண்டன் புதுாரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜதுரை, 30; இவர் மனைவி மணிமேகலை, 25; இவர்களுக்கு, இரண்டு வயதான துரைமணி என்ற ஆண் குழந்தை உள்ளது.
நேற்று காலை, 10:00 மணியளவில், குழந்தை துரைமணிக்கு தடுப்பூசி போட, மனைவியுடன் ராஜதுரை புதுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஹோண்டா பைக்கில் சென்றார். செங்கம் அடுத்த முடியனுார் ஆற்றுப்பாலம் அருகே இவர்கள் மீது, பின்னால் வந்த டிராக்டர் மோதியது. இதில், ஏழு மாத கர்ப்பிணியான மணிமேகலை, குழந்தை துரைமணி ஆகியோர் பலியாயினர். ராஜதுரை படுகாயமடைந்து, செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து ஏற்படுத்திய போளூர் அடுத்த நைனாவரத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சின்னசாமி, 45, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து, புதுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X