நீங்க, 'பில்டப்' கொடுக்கிற அளவுக்கு செந்தில்குமார் ஒண்ணும், 'ஒர்த்'தான ஆள் இல்லையே...

Updated : ஜூலை 20, 2022 | Added : ஜூலை 20, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வராசுப்பிரமணியம் பேட்டி:தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமாருக்கு, ஸ்டாலின் மீது ஏதோ வெறுப்பு இருப்பதால், கட்சியை உடைக்க முடிவு செய்து விட்டார். இந்த அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என, முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு பின்னால் ஏதோ பெரிய சதி இருக்கிறது.நீங்க, 'பில்டப்' கொடுக்கிற அளவுக்கு செந்தில்குமார் ஒண்ணும்,
காடேஸ்வராசுப்பிரமணியம், வைத்தியநாதன், இப்ராஹிம்

ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வராசுப்பிரமணியம் பேட்டி:தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமாருக்கு, ஸ்டாலின் மீது ஏதோ வெறுப்பு இருப்பதால், கட்சியை உடைக்க முடிவு செய்து விட்டார். இந்த அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என, முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு பின்னால் ஏதோ பெரிய சதி இருக்கிறது.

நீங்க, 'பில்டப்' கொடுக்கிற அளவுக்கு செந்தில்குமார் ஒண்ணும், 'ஒர்த்'தான ஆள் இல்லையே... தர்மபுரி தாண்டி அவரை யாருக்கும் தெரியாதே!
அ.தி.மு.க., தென் சென்னை மாவட்ட முன்னாள் நிர்வாகி வைத்தியநாதன் அறிக்கை
: அரிசிக்கும், மோருக்கும், தயிருக்கும் 5 சதவீத வரி. எல்லாவற்றுக்கும் மேலாக மனிதன் இறந்துவிட்டால் அந்த உடலை புதைப்பதாக இருந்தாலும், எரிப்பதாக இருந்தாலும் ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதித்துள்ள இந்த வரியை தட்டி கேட்க வேண்டிய தி.மு.க., அரசு வாய்மூடி மவுனியாக இருக்கிறது.


அப்படி பட்டுன்னு குறை சொல்லக் கூடாது... அவங்க பங்குக்கு, மின் கட்டணத்தை ஏத்தறாங்களே!ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: ஆடி மாதம், அம்மன் கோவில்களில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அதற்காக, மாவட்டத்துக்கு, 50 ஆயிரம் கிலோ தானியங்கள், அம்மன் கோவில்களுக்கு வழங்கி, தமிழக அரசு சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும்.

அப்படியெல்லாம் கேட்டுவிடக் கூடாது... 'மதச்சார்பற்ற அரசுகிட்ட என்ன கேள்வி கேட்டீங்க'ன்னு, தர்மபுரி செந்தில்குமார் அடிக்கவே வந்துடுவார்!
பா.ஜ., சிறுபான்மையின பிரிவு தேசிய பொதுச் செயலர் வேலுார் இப்ராஹிம் பேட்டி
: திராவிட மாடல் அரசு என கூறி வரும், தி.மு.க., ஆட்சியில், பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் விதமாக பெரியார் பல்கலையில் கேள்வித்தாள் வெளியிடப்பட்டது கண்டிக்கத்தக்கது; இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். கேள்விகள், பட்டியலின மக்களை வேதனைஅடைய செய்துள்ளது.


latest tamil newsஉங்களுக்கு இருக்கும் கவலை, பட்டியலின மக்களுக்காக பாடுபடுவதாக தம்பட்டம் அடித்து கொள்ளும் திருமாவளவனுக்கு இல்லையே!


மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை: மத்திய அரசு, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உணவான அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., விதித்துள்ளது. இதேபோல, பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே கடும் விலைவாசி உயர்வால் பரிதவிக்கும் பொதுமக்கள் இதனால் மேலும் சிரமப்படுவர். எல்லாவற்றுக்குமே ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டும் என்ற மன நிலையை மத்திய அரசு மாற்றிக் கொள்ளா விட்டால், மக்களின் கடும் கோபத்திலிருந்து தப்ப முடியாது. உடனடியாக புதிய வரி விதிப்புகளை 'வாபஸ்' பெறுவது அவசியம்.

மற்ற அரசியல்வாதிகளை விட, நீங்கள் உங்களை புத்திசாலித்தனமானவராகக் காட்டிக் கொள்ள ஆசைப்படுவீர்களே... 'பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அரிசிக்கு தான் ஜி.எஸ்.டி.,வரி'ன்னு அரசு சொன்னது உங்களுக்கு விளங்கலையா, தெரியலையா? நீங்க எந்த ரகம் அரசியல்வாதி?புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
21-ஜூலை-202211:22:29 IST Report Abuse
கல்யாணராமன் சு. ஏனென்றால் GST கவுன்சிலின் முடிவுகள் ஒருமித்த கருத்துடன்தான் எடுக்கப்படமுடியும் .... பெரும்பான்மையுடன் அல்ல ...
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
21-ஜூலை-202211:21:06 IST Report Abuse
கல்யாணராமன் சு. ,GST கவுன்சில் (உங்க DW டக்ளசும் இருக்கார்) விதிகளின்படி, எல்லா முடிவுகளும் ஒருமித்த கருத்துடன்தான் எடுக்கப்படவேண்டும் .... பெரும்பான்மை முறையிலான முடிவுகள் எடுப்பதற்கு விதிகள் அனுமதிக்காது ...... OK வா ?
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
21-ஜூலை-202210:16:09 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\மனிதன் இறந்துவிட்டால் அந்த உடலை புதைப்பதாக இருந்தாலும், எரிப்பதாக இருந்தாலும் ஜி.எஸ்.டி., விதிக்கப் பட்டுள்ளது.\\ ஓஹோ, இப்போ இறந்தவர்களை இலவசமாக உடலை புதைக்கறாங்களா? தெரியாம போச்சே?? மயானத்துக்கு வரி கட்டி, லஞ்சம் குடுத்து, போறவங்க வரவங்களுக்கெல்லாம் காசு குடுத்து, இறப்பு சான்றிதழ் வாங்கறதுக்கும் லஞ்சம் குடுத்து லட்ச கணக்குலே செலவு செய்யற மக்களுக்கு GST 5% (500 ரூபாய்?) வரி குடுக்க மனசு வரலேனா, என்ன சொல்லறது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X