2021ல் இந்திய குடியுரிமையை வேண்டாம் என சொன்ன 1.63 லட்சம் பேர்

Updated : ஜூலை 20, 2022 | Added : ஜூலை 20, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் குடிபெயர்ந்தவர்களில் கடந்தாண்டு (2021) மட்டும் 1.63 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இதில் 78 ஆயிரம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.லோக்சபாவில் இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: வெளியுறவு அமைச்சகம்
Indians, Gave Up, Citizenship, Settle Abroad, Govt Data, இந்தியர்கள், குடியுரிமை, வெளிநாடு, மத்திய அரசு, தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் குடிபெயர்ந்தவர்களில் கடந்தாண்டு (2021) மட்டும் 1.63 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இதில் 78 ஆயிரம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.

லோக்சபாவில் இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள தகவலின்படி பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக 2019ல் 1,44,017 பேரும், 2020ல் 85,256 பேரும், 2021ல் 1,63,370 பேரும் என கடந்த 3 ஆண்டுகளில் 3,92,643 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை விட்டுக் கொடுத்துள்ளனர். இவா்கள் அனைவரும் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர்.


latest tamil news


அதிகபட்சமாக 1,70,795 பேர் அமெரிக்க குடியுரிமையும், 64,071 பேர் கனடா குடியுரிமையும், 58,391 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமையும், 35,435 பேர் பிரிட்டன் குடியுரிமையும் பெற்றுள்ளனர். 2015 முதல் 2021 வரை மொத்தம் 9.24 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SHASHI - bangalore,இந்தியா
21-ஜூலை-202200:45:03 IST Report Abuse
SHASHI சொர்கமே என்றாலும் நம் நாட்டுக்கு ஈடாகுமா ?
Rate this:
Cancel
v.subramanian - madurai,இந்தியா
20-ஜூலை-202221:21:04 IST Report Abuse
v.subramanian ஏன் இரட்டை குடியுரிமை கொடுப்பதில்லை என்பதற்கான காரணம் தெரியவில்லை. அதை தெரிந்துகொண்டு பேச வேண்டும்
Rate this:
Cancel
v.subramanian - madurai,இந்தியா
20-ஜூலை-202221:08:51 IST Report Abuse
v.subramanian 2021 ல் இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று சொன்ன 1.63 லட்சம் பேர் என்ற தலைப்பை பார்த்தவுடன் இந்தியாவில் உள்ள 1.63 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று சொன்னார்களோ என்று நினைத்தேன் ஆனால் ஏற்கெனவே வெளிநாட்டில் குடியுரிமை பெட்ற 1.63 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளார்கள் என்பதை தெரிந்துகொண்டேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X