அ.தி.மு.க., அலுவலக சாவி: பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவு

Updated : ஜூலை 20, 2022 | Added : ஜூலை 20, 2022 | கருத்துகள் (43) | |
Advertisement
சென்னை : அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட 'சீல்' ஐ அகற்ற உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அலுவலக சாவியை பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், ஒரு மாதத்திற்கு தொண்டர்கள், நிர்வாகிகள் யாரையும் அனுமதிக்கக்கூடாது எனவும் கூறியுள்ளது.சென்னையில் ஜூலை 11ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் முன்
அதிமுக,சென்னை உயர்நீதிமன்றம்,பழனிசாமி, அதிமுக அலுவலக சாவி, AIADMK, Chennai High Court, Palanisamy, AIADMK Office Key,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட 'சீல்' ஐ அகற்ற உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அலுவலக சாவியை பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், ஒரு மாதத்திற்கு தொண்டர்கள், நிர்வாகிகள் யாரையும் அனுமதிக்கக்கூடாது எனவும் கூறியுள்ளது.

சென்னையில் ஜூலை 11ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் முன் பழனிசாமி தரப்பினருக்கும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. அதைத் தொடர்ந்து கட்சி தலைமை அலுவலகத்துக்கு 'சீல்' வைத்து வருவாய் கோட்ட அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தன. ஜூலை 11ம் தேதி சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி வருவாய் கோட்ட அதிகாரியின் அறிக்கை; போலீஸ் தரப்பு அறிக்கை மற்றும் புகைப்படம் வீடியோ பதிவுகளை தாக்கல் செய்தார்.

பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்; பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ரமேஷ் மற்றும் அரவிந்த் பாண்டியன்; போலீஸ் தரப்பில் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆகியோர் வாதாடினர். வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்ததை அடுத்து இவ்வழக்கின் உத்தரவை தேதி குறிப்பிடாமல் நீதிபதி சதீஷ்குமார் தள்ளி வைத்திருந்தார்.


latest tamil news


இவ்வழக்கில் இன்று பிற்பகல் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சீல் வைக்கப்பட்ட அதிமுக அலுவலக சாவியை பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு தொண்டர்கள், நிர்வாகிகள் யாரையும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது. அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
20-ஜூலை-202221:20:38 IST Report Abuse
Visu Iyer பணத்தின் மீது தான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏனடா.. பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா. அண்ணன் தம்பிகள் தானடா அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே..
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
20-ஜூலை-202221:18:26 IST Report Abuse
Visu Iyer நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
20-ஜூலை-202221:17:57 IST Report Abuse
Visu Iyer உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும்கூட மிதிக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X