ஜனாதிபதி தேர்தல்: திரவுபதி முர்மு முன்னிலை

Updated : ஜூலை 21, 2022 | Added : ஜூலை 21, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
புதுடில்லி: நாட்டின் 15வது ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (ஜூலை 21) துவங்கியது. தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கிய திரவுபதி முர்மு முன்னிலையில் உள்ளார்.இந்தியாவின் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை கடந்த 18ல் நடந்து
PresidentialElection, DroupadiMurmu, YashwantSinha, Vote, ஜனாதிபதி தேர்தல், திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா, ஓட்டு எண்ணிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: நாட்டின் 15வது ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (ஜூலை 21) துவங்கியது. தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கிய திரவுபதி முர்மு முன்னிலையில் உள்ளார்.

இந்தியாவின் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை கடந்த 18ல் நடந்து முடிந்தது. இதில் தே.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் நின்ற யஷ்வந்த் சின்ஹா போட்டியின்னர். இதில் மொத்தமுள்ள 771 எம்.பி.,க்களில் 763 பேரும், 4,025 எம்எல்ஏ.,க்களில் 3,991 பேரும் ஓட்டளித்திருந்தனர்.latest tamil newsபார்லிமென்ட் வளாகத்தில் இன்று (ஜூலை 21) காலை 11 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. எம்.பி.,க்களின் ஓட்டுக்கு தலா 700 புள்ளியும், எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுக்கு மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் புள்ளிகள் அளிக்கப்படும். அதன் அடிப்படையில் கூடுதல் ஓட்டு பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார். இன்று மாலைக்குள் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக ராஜ்யசபா செயலாளர் பிசி மோடி கூறுகையில், மொத்தமுள்ள 748 எம்.பி., ஓட்டுகளில், திரவுபதி முர்முவுக்கு 540 ஓட்டுகள் கிடைத்தது. இதன் மதிப்பு 3,78,000 ஆகும். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 208 ஓட்டுகள் கிடைத்தது. இதன் மதிப்பு 1,45,600 ஆகும். 15 ஓட்டுகள் செல்லாது என்றார்.2வது சுற்று முடிவில், அகர வரிசைப்படி முதல் 10 மாநிலங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அங்கு மொத்தம் 1138 ஓட்டுகள் உள்ளன. இதன் மதிப்பு 1,49,299. அதில், திரவுபதிக்கு 809 ஓட்டுகளும்(1,05,299 மதிப்பு), யஷ்வந்த் சின்ஹாவுக்கு 329ஓட்டுகளும் ( 44,276 மதிப்பு) பதிவாகி உள்ளது.மொத்தமாக , இதுவரை எண்ணப்பட்ட 1,886 (6,73,175) ஓட்டுகளில், திரவுபதி 1,349 ஓட்டுகள் ( 4,83,299 மதிப்பு) பெற்று முன்னிலையில் உள்ளார். யஷ்வந்த் சின்ஹா 537 ஓட்டுகள்(1,89,876 மதிப்பு) பெற்றுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar - Hawally,குவைத்
21-ஜூலை-202219:13:36 IST Report Abuse
Shankar நான் ஏற்கனவே சொன்னது போல செல்லாத ஓட்டுக்கள் கூட நம்முடைய தலைவர்கள் போட்டுள்ளார்கள்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-ஜூலை-202218:55:36 IST Report Abuse
Kasimani Baskaran ஶ்ரீதிரவுபதி முர்முவுக்கு வாழ்த்துகள்...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-ஜூலை-202218:46:49 IST Report Abuse
sankaseshan Dinamalar is too late . The results are out MURMU has won convincingly defeating selfish Sinha.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X