சென்னை: அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்த வெள்ளிவேல், செங்கோல் உள்ளிட்ட பரிசு பொருட்கள் காணவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தின் மெயின் கேட் மற்றும் பிரதான கதவில் இருந்த 'சீல்' ஐ தாசில்தார் திறந்தார். சீல் அகற்றப்பட்டதற்கான ஆவணங்கள் சண்முகம் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. சாவி மேலாளர் மகாலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், சி.வி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் அலுவலகத்தை பார்வையிட்டனர். சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் சி.வி.சண்முகம் கூறுகையில், அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை காணவில்லை. ஜெயலலிதாவின் செங்கோல், வெள்ளிவேல் ஆகியவற்றை காணவில்லை. இது தொடர்பாக பழனிசாமியிடம் தெரிவிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.