ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழும்: அண்ணாமலை

Updated : ஜூலை 22, 2022 | Added : ஜூலை 22, 2022 | கருத்துகள் (169) | |
Advertisement
திருச்சி--''தி.மு.க.,வின் அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அரசின் வாடிக்கை திருச்சியில் நேற்று, அண்ணாமலை அளித்த பேட்டி:சொத்து வரி, மின்சாரம், பால் என அனைத்தையும் விலை உயர்த்தியது தான் தி.மு.க., ஆட்சியின் சாதனை. தவறை சுட்டிக் காட்டினாலும், பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருச்சி--''தி.மு.க.,வின் அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.



latest tamil news




அரசின் வாடிக்கை



திருச்சியில் நேற்று, அண்ணாமலை அளித்த பேட்டி:சொத்து வரி, மின்சாரம், பால் என அனைத்தையும் விலை உயர்த்தியது தான் தி.மு.க., ஆட்சியின் சாதனை. தவறை சுட்டிக் காட்டினாலும், பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத அரசு இது.மக்கள் தான், இந்த அரசை கேள்வி கேட்க வேண்டும். மத்திய அரசு சொல்லித் தான் விலை உயர்வு செய்ததாக, பொய்யையும் சொல்கின்றனர். மத்திய அரசு மீது பழி போடுவது மட்டுமே மாநில அரசின் வாடிக்கையாக உள்ளது.கார்ப்பரேட் நிறுவனமோ, யாரோ ஒரு அமைச்சரின் ஆதாயத்துக்காகவே விலை உயர்வு செய்கின்றனர்.


மனசாட்சி



தினமும் விலை உயர்த்துவது பற்றி முதல்வர் யோசித்துக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. ஆட்சி செய்யத் தெரியாத, மனசாட்சி இல்லாத மாநில அரசின் கையில் மாட்டிக் கொண்டுஉள்ளோம்.கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி விவகாரத்தில் மவுனமாக இருப்பது, தி.மு.க., மட்டும் தான். தி.மு.க.,வின் மெத்தனமும், போலீசாரின் செயல் இன்மையும் தான் அந்த சம்பவத்திற்கு காரணம்.பா.ஜ., நடவடிக்கையால் தான், சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடக்கிறது. சம்பவம் நடந்த பின், நான்கு நாட்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சரே 'எஸ்கேப்' ஆகி விட்டார். பா.ஜ., மீது பழி போடுவதை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.



latest tamil news




சோதனை



நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் என்பதால், போலி பாஸ்போர்ட் ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் பற்றிய ஆவணங்களை, கவர்னரிடம் கொடுத்துள்ளோம்.என்.ஐ.ஏ., சோதனை மூலம், இலங்கைவாசிகளின் குற்றச் செயல்கள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. அமைச்சர்களை சொந்த ஊருக்குள் அனுமதிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.தி.மு.க.,வினர் இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (169)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj Kamal - Thiruvallur,இந்தியா
26-ஜூலை-202211:51:01 IST Report Abuse
Raj Kamal "தி.மு.க.,வின் அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும்". கலையட்டுமே ஆதாரத்தை வெளியிடுங்கள். நீங்க அவ்ளோ நல்லவங்களா மிஸ்டர் அண்ணாமலை? வாய்ப்பில்லை ராஜா.
Rate this:
Cancel
john - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூலை-202222:33:36 IST Report Abuse
john வெளியிடு உன்னை தடுக்கும் அந்த தீயசக்தி எது...
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜூலை-202219:03:53 IST Report Abuse
Venugopal S நீங்கள் முதலில் ஊழல் பட்டியலை வெளியிடுங்கள், அப்படி ஏதாவது ஒன்று தகுந்த ஆதாரங்களுடன் இருந்தால். இந்த ஆட்சி தொடர வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தமிழக மக்கள் முடிவு செய்வார்கள்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
22-ஜூலை-202220:29:32 IST Report Abuse
Visu Iyerஇவர்களிடமா பேசுகிறீர்கள்.. அது தேவையில்லை.. சிலரோடு கவிதைகளை துய்க்க வேண்டும் என்பது கவிஞர் வரிகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X