இதயம் காக்கும் எண்ணெய்!

Updated : ஜூலை 22, 2022 | Added : ஜூலை 22, 2022 | |
Advertisement
எண்ணெய் இல்லா சமையல் என்பது பலருக்கும் எட்டிக்காய்தான். மொறு மொறு தோசை, புசு புசு பூரி என எண்ணெய் சார்ந்த சமையல்தான் பலரது பேவரைட்டாக இருக்கிறது. ஆனால் ஆரோக்கியம் பற்றிப் பேசுபவர்கள் எண்ணெயை எதிரியாகவே பாவிப்பார்கள். ஆனால், அளவான எண்ணெயும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவைதான். அளவுக்கு மீறிய எண்ணெய்தான் ஆரோக்கியத்துக் கேடு . உடல் பருமனை அதிகரிக்க செய்வதில் இந்த
Lifestyle, food, cookingoil, types, heart, benefits, types லைப்ஸ்டைல், எண்ணெய், இதயம், தகவல், பயன்கள்

எண்ணெய் இல்லா சமையல் என்பது பலருக்கும் எட்டிக்காய்தான். மொறு மொறு தோசை, புசு புசு பூரி என எண்ணெய் சார்ந்த சமையல்தான் பலரது பேவரைட்டாக இருக்கிறது. ஆனால் ஆரோக்கியம் பற்றிப் பேசுபவர்கள் எண்ணெயை எதிரியாகவே பாவிப்பார்கள். ஆனால், அளவான எண்ணெயும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவைதான். அளவுக்கு மீறிய எண்ணெய்தான் ஆரோக்கியத்துக் கேடு . உடல் பருமனை அதிகரிக்க செய்வதில் இந்த எண்ணெய்க்கு பெரிய பங்கு உண்டு.
ஆனால் எண்ணெய்க்கும் இதயத்தை காக்கும் குணம் உண்டு என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இது உங்கள் ஆரோக்கியத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஏற்கனவே இதய நோய்கள் அல்லது சிறப்பு கவனிப்பு தேவைப்படும் இதய நிலைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், நீண்ட காலத்திற்கு உதவும் நல்ல சமையல் எண்ணெய்களை தேர்வு செய்வது மிகவும் முக்கியம். சில சமையல் எண்ணெய்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது மற்றும் பல வழிகளில் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும்.

இதயத்திற்கு நன்மை செய்யும் எண்ணெய்களின் பட்டியல் இங்கே:

நல்லெண்ணெய்:


latest tamil newsஇதயம் எப்போதும் ஆரோக்கியமாக எந்தப் பாதிப்பும் அடையாமல் இருக்க மிகச்சிறந்த உணவு பொருளாக கருதப்படுவது நல்லெண்ணெய். நல்லெண்ணையில் செசமோல் மற்றும் செசமின் உட்பட பல கரைக்கப்படாத கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளன. நல்லெண்ணையில் சமைக்கப்பட்ட உணவினை சாப்பிடுவதால் இதயம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட தசை, நரம்பு பகுதிகளில் தேவையில்லாத கொழுப்புகள் தங்குவதை தடுத்து நிறுத்தும். மேலும் இதயத்தை சீராக வைத்திருக்கும்.

தேங்காய் எண்ணெய்:


latest tamil news


Advertisement


தேங்காய் எண்ணெய் உங்கள் இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்பவர்களுக்கு இதய நோய் வருவது குறைவு என்று ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. உடல் பருமனாக இருந்தால் தேங்காய் எண்ணெயில் உள்ள உணவு கொழுப்புகள் உங்கள் எடையை குறைக்கலாம். தேங்காய் எண்ணெயில் டிரைகிளிசரைடுகள் எனப்படும் நல்ல கொழுப்புகள் உள்ளன. இது மற்ற வகை உணவுக் கொழுப்புகளை விட உடலில் கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது.

கடலை எண்ணெய்:


latest tamil newsநிலக்கடலை எண்ணெய் இதயத்திற்கு சிறந்த சமையல் எண்ணெய்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் பாலி-அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிக அளவில் உள்ளது. வைட்டமின் ஈ இதயத்திற்கு நல்லது. அதிலும் இந்த எண்ணெய் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது..

ஆலிவ் எண்ணெய்


latest tamil newsஆலிவ் எண்ணெய் மிகவும் பிரபலமான ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களில் ஒன்றாகும். ஆலிவ் எண்ணெய் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரித்து, உடலில் எல்.டி.எல் எனப்படும் கெட்டகொழுப்பு அளவைக் குறைக்கிறது. ஆலிவ் எண்ணெயில் உள்ள பாலிஃபீனால்கள் சமைக்கும் போது எளிதில் சேதம் அடையும் அதனால் வெப்பத்தில் சமைக்காத உணவுகளான சாலட் போன்ற உணவுகளில் நீங்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.

கடுகு எண்ணெய்


latest tamil newsஇந்த எண்ணெய் இதயத்திற்கு மட்டுமல்ல, தோல், மூட்டுகள் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கும் நன்மை பயக்கும். வட இந்தியாவில் பல உணவு வகைகளில் கடுகு எண்ணெயை தான் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணெயில் ஏராளமான மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி-அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

அரிசி தவிடு எண்ணெய் (ரைஸ்பிரான் ஆயில்)


latest tamil newsஅரிசித் தவிடு எண்ணெய் இதயத்திற்கு சிறந்த சமையல் எண்ணெய்களில் ஒன்று. இந்த எண்ணெய் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றின் சரியான சமநிலையைக் கொண்டுள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். சாலடுகள், குக்கீகள் மற்றும் கேக்குகள் தயாரிக்கும் போது இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

சூரியகாந்தி எண்ணெய்


latest tamil newsசூரியகாந்தி எண்ணெய் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும். மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடுகையில், சூரியகாந்தி எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது, இது இதயத்திற்கு நல்லது. எந்த எண்ணெயாக இருந்தாலும் நீங்கள் அளவோடு பயன்படுத்துவதே சிறந்தது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X