எக்ஸ்குளுசிவ் செய்தி

கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு காரணம் என்ன?

Updated : ஜூலை 23, 2022 | Added : ஜூலை 22, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். பள்ளி முன் திரண்ட ஆயிரக்கணக்கானோர், பள்ளிச் சொத்துக்களை சேதப்படுத்தினர். பள்ளி பஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர்.இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள். கலவரத்தில் ஈடுபட்டோர் மீது, போலீசார் தீவிர நடவடிக்கை
கள்ளக்குறிச்சி கலவரம்  காரணம் என்ன?

கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். பள்ளி முன் திரண்ட ஆயிரக்கணக்கானோர், பள்ளிச் சொத்துக்களை சேதப்படுத்தினர். பள்ளி பஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர்.இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள். கலவரத்தில் ஈடுபட்டோர் மீது, போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்; 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நுாற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களில் சிலர், கால், கை உடைந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து, ஓய்வுபெற்ற டி.ஜி.பி., ரவி கூறியதாவது: கணியாமூர் சக்தி பள்ளியை மையமாக வைத்து நடத்தப்பட்ட கலவரத்தை, முன்கூட்டியே கணித்து இருந்தால், கட்டாயம் தவிர்த்திருக்க முடியும்.


latest tamil news


அந்த வகையில், போலீஸ் நடவடிக்கைகளில் கொஞ்சம் சுணக்கம் இருந்திருக்குமோ என்ற, அச்சம் பரவலாக உள்ளது.அதேபோல, பள்ளிக்கு எதிராக வன்முறை எண்ணத்தோடு பெரும் கூட்டம் கூடும்போதே, பெரும் திரளாக அங்கு திரண்டிருந்த போலீசார், அவர்களை வன்முறையில் ஈடுபடாமல் செய்திருக்கலாம். அதற்கான யுக்திகள், போலீசுக்கு நன்கு தெரியும்.

வன்முறையாளர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்ததன் விளைவே, இத்தனை பெரிய கலவரம். 'வீடியோ' பதிவுகளை வைத்து, கலவரத்தில் ஈடுபட்டோரை பிடித்து, கைது செய்துள்ளனர்.கலவரத்தில் ஈடுபட்டவர்களாக கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 18 -- 25 வயதுடையோர் தான்; கல்லுாரியில் படிப்பவர்கள். அவர்கள் மீது, ஏழு ஆண்டுகளுக்கும் குறைவில்லாத சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவராக பார்க்கப்படுவர். இதுவே, அவர்களை அடுத்தடுத்து குற்றம் செய்ய வைத்து, நிரந்தர குற்றவாளியாக்கும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்ல; ஒரு வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று வந்து விட்டால், சிறை வாழ்க்கை பழக்கமாகி விடலாம்.

இதனால், அடுத்தடுத்து அந்த நபர் குற்ற செயல்களில் ஈடுபடலாம். சிறைக்கு செல்லும் இளசுகளுக்கு, அங்கு ஏற்கனவே உள்ள ரவுடிகள், பெரும் குற்றவாளிகளுடன் தொடர்பு ஏற்படலாம். அதனாலும், அவர்களின் செயல்பாடு, குற்றங்களை நோக்கி செல்லக் கூடிய வாய்ப்பு உள்ளது. இது தவிர, பள்ளி, கல்லுாரி படிப்பை முடித்து விட்டு, அவர்கள் அரசு வேலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும். பாஸ்போர்ட் எடுக்கும் போதும் சிக்கல் ஏற்படும். வேலைக்காக வெளிநாடு செல்வோருக்கு சிக்கல் ஏற்படலாம். சிறப்பு நீதிமன்றம் அமைத்து, வழக்கை வேகமாக நடத்தினாலும், வழக்கு அவ்வளவு சீக்கிரம் முடிவடையாது; பல ஆண்டுகள் இழுத்து கொண்டே போகும். எனவே, எதிர்காலத்தில் வன்முறையோ, கலவரமோ நடக்கும் பகுதிக்கு போகாமல் இருப்பது நல்லது.

இந்த அறிவுரை பெற்றோருக்கும் தான். அதுபோன்ற இடங்களுக்கு பிள்ளைகளை அனுப்பக் கூடாது.பள்ளி அல்லது கல்லுாரியில் படிக்கும் ஒரு பையன், வன்முறை, கலவரத்தில் ஈடுபடுகிறான் என்றால், அவன் வளர்க்கப்பட்ட சூழலே தவறு என்று தான் கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் நல்லொழுக்க கல்வி என்ற பாட திட்டம் முழுமையாக மறைந்து விட்டது. இன்றைய கல்வி திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்தால் மட்டுமே, மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கம் மீண்டும் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் --

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
24-ஜூலை-202221:25:11 IST Report Abuse
sankaranarayanan ஓய்வுபெற்ற டி.ஜி.பி., ரவி கூறியதாவது கணியாமூர் சக்தி பள்ளியை மையமாக வைத்து நடத்தப்பட்ட கலவரத்தை, முன்கூட்டியே கணித்து இருந்தால், கட்டாயம் தவிர்த்திருக்க முடியும். போலீஸ் நடவடிக்கைகளில் கொஞ்சம் சுணக்கம் இருந்திருக்குமோ என்ற, அச்சம் பரவலாக உள்ளது.அதேபோல, பள்ளிக்கு எதிராக வன்முறை எண்ணத்தோடு பெரும் கூட்டம் கூடும்போதே, பெரும் திரளாக அங்கு திரண்டிருந்த போலீசார், அவர்களை வன்முறையில் ஈடுபடாமல் செய்திருக்கலாம். அதற்கான யுக்திகள், போலீசுக்கு நன்கு தெரியும். ரவி அவர்கள் தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். உண்மை அதுதான். போலீசு சற்று சமயோசிதமாக முன்கூட்டியே இன்டெலிஜென்ஸ் உதவியை நாடி நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் கூறியபடி, இந்த பேரிழவை, பொருட்சேதத்தை முற்றிலும் தவித்திருக்கலாம். எங்கு தவறு நடந்துள்ளது என்று சற்று ஆராய்ந்து இனி அதுபோன்ற தவறுகளால் பொருள் நஷ்டத்தை குறைக்கலாம். வாழ்க தமிழகம் வளர்க்க பாரதம்
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
24-ஜூலை-202211:19:23 IST Report Abuse
J. G. Muthuraj தமிழ்நாட்டை எப்படியும் ஓச்சிப்பிடணும்ன்னு ஒரு தீய கூட்டம் ஆட்டுத்தோல் போர்த்திய தெருப்பிராணி போல் அலைகிறது....
Rate this:
Cancel
morlot - Paris,பிரான்ஸ்
23-ஜூலை-202218:03:18 IST Report Abuse
morlot If is happened in france,immediately armed force will enter. They are very bad,merciless,and will not hésitate use their arm to disperse the crowd. Where as one side political parties and people of opposite parties will make use this chance to damage public as well as private parties. Modi should rewrite laws as for concerning mob damage and eliminate all the rowdies without any mercy.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X