சென்னை:தமிழகத்தில் கொரோனா தொற்றால் 2,033 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாநிலத்தில் நேற்று, 35 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சென்னையில் 466; செங்கல்பட்டில் 217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாநிலம் முழுதும் 2,033 பேருக்கு தொற்று உறுதியானது.சிகிச்சை பெற்றவர்களில் நேற்று 2,383 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவ மனைகளில் 791 பேர் உட்பட, 16 ஆயிரத்து 153 பேர் சிகிச்சையில் உள்ளனர். விழுப்புரத்தை சேர்ந்த 84 வயது முதியவர், தொற்றால் இறந்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.