அச்சிறுப்பாக்கத்தில் கூண்டில் சிக்கிய 300 குரங்குகள்!

Updated : ஜூலை 23, 2022 | Added : ஜூலை 23, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் மக்களை பாடாய்ப்படுத்தி வந்த 300க்கும் மேற்பட்ட குரங்குகள், கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன. குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை எடுத்த நடவடிக்கையை, பொதுமக்கள் பாராட்டினர்.செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் வெங்கடேசபுரம், ராவுத்தநல்லுார், காந்தி நகர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் மக்களை பாடாய்ப்படுத்தி வந்த 300க்கும் மேற்பட்ட குரங்குகள், கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன. குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை எடுத்த நடவடிக்கையை, பொதுமக்கள் பாராட்டினர்.latest tamil news
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் வெங்கடேசபுரம், ராவுத்தநல்லுார், காந்தி நகர், அப்துல் கலாம் நகர், நேரு நகர், கஸ்துாரி நகர் உட்பட பல பகுதிகளில், குரங்குகள் கூட்டமாக திரிவது அதிகரித்தது. கடை வீதியில் பொருட்களை வாங்கிச் செல்லும் பொதுமக்களிடமிருந்து பையை பறிப்பது, வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவது, சமைத்த உணவுகளை துாக்கி செல்வது போன்ற அட்டகாசங்களை, குரங்குகள் செய்து வந்தன.

இவற்றின் அட்டகாசத்தால் பொதுமக்கள், சிறுவர் - சிறுமியர் பெரும் இன்னல்களை சந்தித்தனர்.குரங்கு தொல்லையில் இருந்து காப்பாற்றும்படி, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் வனத்துறையினருக்கு புகார் மனுக்களை அளித்தனர்.இதையடுத்து, குரங்குகளை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரு நாட்களில் 300க்கும் மேற்பட்ட குரங்குகளை, கூண்டு வைத்து பிடித்துஉள்ளனர்.பிடிபட்ட குரங்குகளை, வனப் பகுதிக்குள் விடுவதற்கு, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


latest tamil news
பெயர் குறிப்பிடாத மதுராந்தகம் வனச்சரக அலுவலர் ஒருவர் கூறியதாவது:
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் குரங்குகளின் தொல்லை அதிகம் இருப்பதாக வனத்துறைக்கு புகார் வந்தது.அதனடிப்படையில் வெங்கடேசபுரம், ராவுத்தநல்லுார், காந்தி நகர், நேரு நகர், கஸ்துாரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகளை பிடிக்க முடிவு செய்யப்பட்டது.


வாழைப்பழம்குரங்குகளை பிடிப்பதற்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றோரை வைத்து, குரங்குகளை பிடிக்க திட்டமிட்டோம்.குரங்குகளுக்கு பிடித்தமான வேர்க்கடலை, தேங்காய், வாழைப்பழம் மற்றும் பிஸ்கட் போன்றவற்றை, குரங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சிறிய அளவு வீசி, மீதம் உள்ளவற்றை இரும்பு கூண்டுக்குள் வைத்தோம்.

இவற்றை உண்பதற்காக, குரங்குகள் ஒவ்வொன்றாக இரை தேடி கூண்டுக்குள் வந்ததும், வனக்காவலர் கூண்டுகளை மூடிவிட்டார்.வெங்கடேசபுரம், ராவுத்தநல்லுார், ஒரத்தி 95 குரங்குகள், அப்துல்கலாம் நகர், நேரு நகரில் பிடிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட குரங்குகள், கன்னிவாக்கம் பகுதி காப்புக்காட்டில் விடப்பட்டன.காப்புக்காடுகளில் குரங்குகளுக்கான உணவு, பாதுகாப்பு, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் உள்ள காடுகளை தேர்ந்தெடுத்து தான் குரங்குகள் விடப்பட்டுள்ளன. மக்கள் நிம்மதியாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.


'டிவி ரிமோட்'வெங்கடேசபுரத்தில் வசிக்கும் இல்லத்தரசி ராஜேஸ்வரி, 45, என்பவர் கூறியதாவது:
எங்கள் பகுதியில், குரங்குகள் சுற்றித்திரிந்தன. வீட்டு மொட்டை மாடியில் தேங்காய், வேர்க்கடலை என, எந்த உணவு பொருளையும் வெயிலில் உலர்த்த முடியாது.

சில நேரங்களில் காயவைக்கப்படும் துணிகளையும் துாக்கி சென்றுவிடும். கவனிக்காத நேரத்தில் வீட்டுக்குள் வந்து மொபைல் போன், பர்ஸ், 'டிவி ரிமோட்' உள்ளிட்ட பொருட்களை எடுத்து வீசிவிடும்.இரண்டு நாட்களாக, கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து வருகின்றனர். பாவமாக இருந்தாலும், தற்போது தான் நிம்மதியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.


நல்ல நடவடிக்கைநேரு நகர் பகுதி மளிகை கடை உரிமையாளர் கண்ணன் கூறியதாவது:மளிகை கடையில் உள்ள பொருட்களை துாக்கி செல்வது, வாடிக்கையாளர்களிடம் சேட்டைகள் செய்வது, பொருட்கள் வாங்கி செல்வோரிடமிருந்து பைகளை பறிப்பது உள்ளிட்ட செயல்களில் குரங்குகள் ஈடுபட்டு, தொந்தரவு கொடுத்தன.இதனால், குழந்தைகளுடன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்து விட்டனர். பொருளாதார இழப்பு ஏற்பட்டது. தற்போது கூண்டு வைத்து பிடித்து சென்றது நல்ல நடவடிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.


பாதுகாப்பு தேவை


காடுகளில் குரங்குகளுக்கு தேவையான உணவுகள் கிடைக்காததால், நகர் பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றன. ஆகையால், காடுகளில் நாவல், அத்தி, புளியம், மா போன்ற பழ வகை மரங்கள் நட்டு, வனத்துறை பராமரிக்க வேண்டும். பிடிக்கப்பட்ட குரங்குகளை, பாதுகாப்பான முறையில் காப்புக்காடுகளில் விடவேண்டும்.- சமூக ஆர்வலர்கள்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
23-ஜூலை-202219:55:09 IST Report Abuse
Viswam தூக்கிசெல்லுவது, வீசுவது,சேட்டைகள் செய்வது, பறிப்பது, தொந்தரவு கொடுப்பது எல்லாமே திராவிட மாடல் தொழிலில் தேர்ந்த குரங்குகளாக இருக்கிறது. லோக்கல் கழக கண்மணிகள் ட்ரைனிங் கொடுத்து இறக்கிவிட்டுருக்கிறார்கள்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
23-ஜூலை-202215:51:31 IST Report Abuse
வெகுளி மக்களை பாடாய்ப்படுத்தி வந்த 300க்கும் மேற்பட்ட குரங்குகள். சேட்டையை பார்த்தால் பிடிபட்டவை திராவிட குரங்குகள் போலிருக்கே.
Rate this:
Cancel
sankar iyer - ulagam,ஆப்கானிஸ்தான்
23-ஜூலை-202215:47:44 IST Report Abuse
sankar iyer அது தமிழ் குரங்கா சார்
Rate this:
23-ஜூலை-202221:01:19 IST Report Abuse
ஆரூர் ரங்திராவிடக் குரங்காக இருக்ககூடாதா😉😉 சார்? ஏதோ ஒரு தெலுங்கர் தமிழர்களை நாரடித்து விட்டார் என்பதை இப்படியா கிண்டல?டிப்பது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X