வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'போதை கலாசாரத்தை தி.மு.க., அரசு போற்றி வளர்க்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தின் பாதை போதை ஆகிறது. புத்தகப் பைகளை சுமக்க வேண்டிய கைகள், பொட்டலங்களை சுமக்கின்றன. கஞ்சா போதை அதிகரிப்பால், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பாலியல் வன்முறைகளால் நெஞ்சு பதைக்கிறது. போதை கலாசாரத்தை தி.மு.க., அரசு போற்றி வளர்க்கிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழக பா.ஜ., சார்பில், கஞ்சா போதையில் சமூக விரோதிகளால் நடந்துள்ள குற்ற செயல்கள், கஞ்சா புழக்கம் அதிகரிப்பிற்கான காரணங்களை விளக்கும் வீடியோ பதிவும் வெளியிடப்பட்டுள்ளது.