ஆடி கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Updated : ஜூலை 23, 2022 | Added : ஜூலை 23, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், காவடிகளுடன் வந்து முருகப் பெருமானை தரிசித்தனர்.தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தணிக்கு வந்தனர். பக்தர்கள் பால், பன்னீர், புஷ்ப, மயில் மற்றும் அன்னக்காவடிகளை தோளில் சுமந்து, மலைக்
ஆடி கிருத்திகை, முருகன் கோயில், பக்தர்கள், வழிபாடு

சென்னை: திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், காவடிகளுடன் வந்து முருகப் பெருமானை தரிசித்தனர்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தணிக்கு வந்தனர். பக்தர்கள் பால், பன்னீர், புஷ்ப, மயில் மற்றும் அன்னக்காவடிகளை தோளில் சுமந்து, மலைக் கோவிலுக்கு சென்று மூலவரை வழிபட்டனர்.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி மாதம் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தாலும், இந்த மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. ஆடி கிருத்திகை அன்று, முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம்.


latest tamil news



அந்த வகையில், வடபழனி முருகன், கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீசுவரர், பாடி திருவலிதாய நாதர், அண்ணாநகர் மேற்கு தென்றல் காலனி பாலசுப்பிரமணிய சுவாமி, அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர், புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர், குரோம்பேட்டை குமரன் குன்றம், குன்றத்துார் முருகன், பிராட்வே காளிகாம்பாள் கோவில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, இன்று(ஜூலை 23) முருக பெருமானுக்கு காலையில் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன.

தொடர்ந்து மாலை, மயில் வாகனத்தில், முருகப் பெருமான் வீதியுலா நடந்தது. இந்த கோவில்களில், பக்தர்கள் காவடி எடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். வடபழனி, கந்தகோட்டம் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், வரிசைகளில் நின்று மூலவரை தரிசித்தனர்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கலில் உள்ள, அன்புநாயக ஈஸ்வரர் கோவில் ஆறுமுகப் பெருமானுக்கு நடந்த, ஆடி கிருத்திகை 56 ஆம் ஆண்டு விழாவில், காலை சுவாமி முருகருக்கு சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து கோவில் எதிரில் 20 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மிளகாய்சாந்து அபிஷேகமும் நடந்தது. அதன் பின்னர் ஏராளமான பெண்கள் அலகு குத்தி பால்குடம் ஏந்தியும், ஆண்கள் காவடி சுமந்து ஆடிசென்றனர்.அதை தொடர்ந்து, பத்துக்கு மேற்பட்ட ஆண் பக்தர்கள் அலகு குத்தி உரல் இழுத்து சென்றனர். தொடர்ந்து கார், ஜீப், மற்றும் சுவாமி தேர்களை அலகு குத்தி ஆண் பக்தர்கள் இழுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூலை-202209:59:52 IST Report Abuse
அப்புசாமி பிரதமரே தமிழக மக்களுக்கு ஆடிக்கிருத்திகை வாழ்த்து சொல்லிட்டாரு. இனிமே ஆடி வெள்ளி, தைப்பூசம், தை வெள்ளி, மசானக் கொள்ளை, மாரியம்மன் செடல்னு வாழ்த்துச் சொல்ல ஒரு ஆளைப் போட்டுருங்க. தமிழனுக்கு டில்லில அப்பிடி வேலை கிடைச்சாத்தான் உண்டு.
Rate this:
Cancel
Srprd -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202208:55:03 IST Report Abuse
Srprd வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா
Rate this:
Cancel
23-ஜூலை-202218:13:34 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் முருகன் அருள் முன்னிற்கும் ......... தமிழகத்தை பெருந்தீமையில் இருந்து காப்பாற்றும் ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X