விமானத்தில் மயங்கிய பயணி: முதலுதவி சிகிச்சை அளித்த தமிழிசைக்கு பாராட்டு குவிகிறது

Updated : ஜூலை 24, 2022 | Added : ஜூலை 23, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் இருந்து ஐ தராபாத் சென்ற விமானத்தில் பயணி ஒருவர் மயக்கமடைந்தார். அந்த விமானத்திலேயே பயணம் செய்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தார். இதற்கு பலர் பாராட்டு தெரிவித்தனர்.டில்லியில் இருந்து தெலுங்கானா தலைநகர் ஐ தராபாத்திற்கு தனியார் விமானம் சென்றது. அதில், தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை
Tamilisai Soundararajan,தமிழிசை,தமிழிசை சௌந்தரராஜன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியில் இருந்து ஐ தராபாத் சென்ற விமானத்தில் பயணி ஒருவர் மயக்கமடைந்தார். அந்த விமானத்திலேயே பயணம் செய்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தார். இதற்கு பலர் பாராட்டு தெரிவித்தனர்.

டில்லியில் இருந்து தெலுங்கானா தலைநகர் ஐ தராபாத்திற்கு தனியார் விமானம் சென்றது. அதில், தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசையும் பயணித்தார்.நடுவானில் விமானம் பயணித்து கொண்டிருந்த போது, அதிகாலை 4 மணியவில், விமான பணிப்பெண் ஒருவர், 'விமானத்தில் டாக்டர் யாரேனும் உள்ளீர்களா ? பயணி ஒருவர் மயங்கிய நிலையில் உள்ளார்' எனக்கூறினார். உடனடியாக தமிழிசை எழுந்து, அந்த பயணி அருகே சென்றார். அவர், வியர்த்த நிலையில் மயங்கிய நிலையில் கிடந்தார். சற்றும் தாமதிக்காமல் அவருக்கு சிகிச்சை அளித்த தமிழிசை, அந்த பயணி கண் விழிக்கும் வரை அருகில் அமர்ந்து பயணித்தார். அந்த பயணி உடல்நிலை சற்று தேறி கண் விழித்ததும் மற்ற பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.latest tamil news

மயக்கமடைந்த அந்த பயணி, ஐதராபாத் சென்றதும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் மயங்கியது குறித்து உடனடியாக தகவல் தெரிவித்த விமான பணிப்பெண்ணுக்கு தமிழிசை பாராட்டு தெரிவித்தார். முதலுதவி சிகிச்சை அளித்த தமிழிசைக்கு பயணிகள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். தமிழிசை முதலுதவி அளித்ததை படம் பிடித்த சக பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்தவர்கள், தமிழிசையை பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர். தமிழிசை டாக்டருக்கு படித்தவர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (34)

krishna -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202212:36:43 IST Report Abuse
krishna INDHA MIGA PERYA UDHAVIYILUM KURAI KANDU PIDITHU KAARUTHU PODUVAANUGA
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
24-ஜூலை-202205:49:36 IST Report Abuse
N Annamalai அருமை .காலத்தால் செய்த உதவி .
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
24-ஜூலை-202205:28:57 IST Report Abuse
sankaseshan செய்த உதவியய் சொல்லிக்காட்டி விளம்பரம் தேடுபவர்கள் மானமிலா திருட்டு திராவிடர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X