மேற்கு வங்க கவர்னராகிறார் 'மாஜி' தலைமை நீதிபதி?

Updated : ஜூலை 24, 2022 | Added : ஜூலை 24, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
துணை ஜனாதிபதி தேர்தலில் ஜக்தீப் தன்கர் போட்டியிடுவதால், மேற்கு வங்க கவர்னராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.ராஜினாமாமேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு 2019ல் மாநில கவர்னராக ஜக்தீப் தன்கர் நியமிக்கப்பட்டதில் இருந்து அவருடன் மாநில அரசு
மேற்கு வங்க கவர்னராகிறார்  'மாஜி' தலைமை நீதிபதி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


துணை ஜனாதிபதி தேர்தலில் ஜக்தீப் தன்கர் போட்டியிடுவதால், மேற்கு வங்க கவர்னராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.ராஜினாமா


மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு 2019ல் மாநில கவர்னராக ஜக்தீப் தன்கர் நியமிக்கப்பட்டதில் இருந்து அவருடன் மாநில அரசு மோதலில் ஈடுபட்டது.இந்நிலையில், துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.


latest tamil newsஅதனால் கவர்னர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்கத்தையும் கவனித்து வருகிறார்.இதையடுத்து, மேற்கு வங்கத்தின் அடுத்த கவர்னராக யார் நியமிக்கப்படுவர் என்ற எதிர்பார்ப்பு திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வில் எழுந்துள்ளது.சமீபத்தில் டார்ஜிலிங் சென்றிருந்தபோது, ஜக்தீப் தன்கர் மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுடன், மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜக்தீப் தன்கர் துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட உள்ளது குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது.


பரிசீலனை


மேலும், மாநில கவர்னராக, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பெயர் பரிசீலனையில் உள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு மம்தா பானர்ஜி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.வரும் 2024 லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, மம்தா பானர்ஜி மற்றும் திரிணமுல் காங்.,கை எதிர்கொள்ள சட்டம் தெரிந்த குறிப்பாக அரசியல் சாசனம் தெரிந்த ஒருவரை மாநில கவர்னராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படியே, ரஞ்சன் கோகோயின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் கோகோய், உத்தர பிரதேசம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு மற்றும் சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார். இவை பா.ஜ., அரசுக்கு சாதகமாக அமைந்தன. அதனால், ரஞ்சன் கோகோய், மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புஉள்ளதாக கூறப்படுகிறது.இவருடைய தந்தையும், காங்கிரசைச் சேர்ந்தவருமான கேசப் சந்திர கோகோய், அசாமின் முதல்வராக, 1982ல் இரண்டு மாதங்கள் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
24-ஜூலை-202210:31:12 IST Report Abuse
sankar பிஜெபி காரர் கவர்னர் ஆகிறார். அதுக்கு மேல இந்த கொம்பில்லாத ஆடுங்க அந்த வங்கத்து சிங்கத்திடன் ஒண்ணுமெ பண்ணமுடியாது.
Rate this:
Cancel
Srprd -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202208:52:24 IST Report Abuse
Srprd Those who worked earlier in Government should not be allowed to enter politics including the role of a Governor, advisor etc.
Rate this:
Cancel
24-ஜூலை-202207:30:01 IST Report Abuse
Devaraju Singapore Next match 20/20 in West bengal? 😂
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X