யூஜின்: உலக தடகள ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ்சோப்ரா வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் , உலக தடகள சாம்பியன்ஷிப் 18வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 23 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் இன்று இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ் பங்கேற்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்தவர் நீரஜ் சோப்ரா.

19 ஆண்டுக்குப்பின் சாதனை
இன்றைய இறுதிச்சுற்றில் 88.13 தூரம் ஈட்டி எறிந்து வெள்ளி பதக்கம் பெற்றார். உலக தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் ஆவார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 19 ஆண்டுகளுக்குப்பின் பதக்கம் கிட்டியுள்ளது . இவரது சாதனை மூலம் இந்தியாவுக்கு பெருமை அடைகிறது.
