குரூப் 4 தேர்வு; தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி இல்லை: வேதனையுடன் திரும்பினர் பலர்; போராட்டம்

Updated : ஜூலை 25, 2022 | Added : ஜூலை 24, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
சென்னை: குரூப் 4 தேர்வுக்கு தாமதமாக வந்ததாக சென்னை, மதுரை, சேலம் , உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலர் திருப்பி அனுப்பப்பட்டனர். தேர்வு துவங்கிய பிறகு வந்தவர்களை அனுமதிக்கப்படவில்லை. இதனால், பல இடங்களில் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் 7,301 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாநிலம் முழுவதும் தேர்வு நடைபெற்று
டிஎன்பிஎஸ்சி, தேர்வு, தாமதம், tnpsc, exam, latecomers,

சென்னை: குரூப் 4 தேர்வுக்கு தாமதமாக வந்ததாக சென்னை, மதுரை, சேலம் , உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலர் திருப்பி அனுப்பப்பட்டனர். தேர்வு துவங்கிய பிறகு வந்தவர்களை அனுமதிக்கப்படவில்லை. இதனால், பல இடங்களில் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 7,301 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாநிலம் முழுவதும் தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் இந்த முறை தேர்வானது காலை 9: 30 மணிக்கே துவங்கியது. தேர்வு எழுத வருபவர்கள் காலை 9:00 மணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், பலர் தாமதமாக வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேநேரத்தில் பல இடங்களில் தாமதமாக வந்தவர்கள் தங்களை அனுமதிக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.


latest tamil news


வாக்குவாதம்மயிலாடுதுறை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்காக 80 மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் 23 ஆயிரத்து 953 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இன்று காலை தேர்வு தொடங்கிய நிலையில் சீர்காழி தென்பாதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு 30க்கும் மேற்பட்டோர் சில நிமிடங்கள் தாமதமாக வந்தனர். அவர்களை தேர்வு மைய அதிகாரிகள் தேர்வு எழுதுவதற்காக மையத்திற்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். இதனை அடுத்து அவர்கள் அனைவரும் தங்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவேண்டும் எனக்கூறி தேர்வு மைய அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.


latest tamil news
அப்போது அங்கு வந்த சீர்காழி தாசில்தார் செந்தில் குமாரையும் அவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேசிய தாசில்தார் 9 மணிக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்ததால் தாமதமாக வந்த 30க்கும் மேற்பட்ட தேர்வர்கள் செய்வதறியாது தவித்தனர்.


சாலை மறியல்
latest tamil newsசேலம் மாவட்டம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில், இன்று. டி.என்.பி.சி., குரூப் 4 தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு, ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக, காலை 9:00 மணி அளவில் 30க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். அப்போது, நுழைவாயில் மூடப்பட்டு தேர்வுக்கு அனுமதிக்காததால், பெரம்பலூர் மாவட்டம், கைகளத்தூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் உட்பட 30க்கும் மேற்பட்டோர் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவலறிந்த ஆத்தூர் தாசில்தார் மாணிக்கம், ஆத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சில மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதபடி தேர்வு அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்தனர் ஆனால், தாசில்தார் ஏற்றுக் கொள்ளாமல் அடுத்த முறை நடக்கும் தேர்வுக்கு முன்கூட்டியே வர வேண்டும் என்று அறிவுரை கூறிய அனுப்பினார். மாணவர்கள் கண்ணீருடன் சென்றனர். அதேபோல் ஆத்தூர், தலைவாசல் பகுதியில் உள்ள சில மையங்களில் தாமதமாக வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.


சென்னைசென்னை புதுக்கல்லூரியில் தாமதமாக வந்ததால் சிலர் அனுமதிக்கப்படவில்லை. இதனால், மைய வாசலில் அமர்ந்து தேர்வர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். திருவாரூர், தூத்துக்குடி, செஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலும் தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayaraman -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202222:13:55 IST Report Abuse
jayaraman போட்டித் தேர்வுகளை காலை 11.30 மணிக்கு ஆரம்பிக்கலாம்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஜூலை-202221:27:59 IST Report Abuse
Bhaskaran அரசு பணிக்கு இந்தமாதிரி தாமதமாகவரும் ஆட்களை தேர்ந்தெடுத்தால் பணிக்கு பகல் 12 மணிக்கு தான் வருவாங்கோ
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
24-ஜூலை-202220:30:11 IST Report Abuse
krish மாணவர்கள், தேர்வுக்கு கண்டிப்பாக ஐந்து நிமிடங்கள் முன்னர் வரவேண்டும். இன்றைய நவீன மின்னணு தொடர்பு சாதனங்கள் சட்டத்திற்கு விரோதமாக, நெறிமுறை தவறி பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளபோது, தாமதமாக வந்து சர்ச்சையில் ஈடுபடுவது நியாயம் இல்லை. ஒழுக்கம், நேரம், காலம் கட்டுப்பாடு மாணாக்கர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்... , ஒப்புரவு ஒழுகு... போன்ற பழமொழிகள், மூத்தோர் மொழிகள் அறிந்து, உணர்ந்து செயல்படுக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X