கருத்து சுதந்திரம் முழுமையாக இல்லை: ரேகா நாயர்

Updated : ஜூலை 27, 2022 | Added : ஜூலை 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
உண்மையை உரக்க பேசும் துணிச்சல், நினைத்ததை பளிச்சென எழுதும் எழுச்சி, பார்வையில் தெறிக்கும் நேர்மை தீ... என பல கலைகளில் கலந்தபடி பயணிக்கும் நடிகை ரேகா நாயர், பார்த்திபன் இயக்கிய ‛இரவின் நிழல்' படத்தில் பிணமாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இது குறித்து மனம் திறக்கிறார்...எழுத்தில் துவங்கி நடிப்பு வரை உங்கள் பயணம்?பள்ளி காலங்களில் எழுத்து, பேச்சு என
கருத்து சுதந்திரம் முழுமையாக இல்லை: ரேகா நாயர்

உண்மையை உரக்க பேசும் துணிச்சல், நினைத்ததை பளிச்சென எழுதும் எழுச்சி, பார்வையில் தெறிக்கும் நேர்மை தீ... என பல கலைகளில் கலந்தபடி பயணிக்கும் நடிகை ரேகா நாயர், பார்த்திபன் இயக்கிய ‛இரவின் நிழல்' படத்தில் பிணமாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இது குறித்து மனம் திறக்கிறார்...


எழுத்தில் துவங்கி நடிப்பு வரை உங்கள் பயணம்?

பள்ளி காலங்களில் எழுத்து, பேச்சு என பயணித்தேன். அதற்கு கிடைத்த அங்கீகாரம் என்னை கவிதை எழுத தூண்டியது. 12ம் வகுப்பில் அகில இந்திய வானொலி ‛சாதனை கவிஞர்' பட்டம் வழங்கியது. பின் பட்டிமன்ற பேச்சாளர், டிவி செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளர் என பல கட்டங்களை தாண்டி கேரளாவின் நடிப்பு பட்டறை அனுபவங்களை வைத்து டிவி, சினிமாவில் நடிக்க துவங்கினேன்.


கேரளாவை சேர்ந்த ரேகாவுக்கு தமிழ் மொழி ஈர்ப்பு எப்படி?

என் அப்பா சிவன் கேரளாவில் இருந்து வாழ வழி தேடி தான் தமிழகம் வந்தார். தமிழகத்தில் நான் வசித்த பகுதியில் இருந்த ஒரு மலையாள பள்ளியில் கட்டணம் அதிகமாக இருந்ததால் தமிழ் பள்ளியில் படிக்க வைத்தார். அதனால் தமிழ் மொழியால் ஈர்க்கப்பட்டேன். தமிழ் வழியில் பி.லிட்., எம்.ஏ., என 13 டிகிரி வரை படித்துள்ளேன்.


சமூக சீர்கேடுகளை எதிர்த்து பேசும் துணிச்சல் எப்படி வந்தது?

கேரளாவில் நாங்கள் வசித்த ஊருக்குள் எந்த பிரச்னை நடந்தாலும் பகுதி மக்கள் அப்பாவிடம் முறையிடுவர். அவரும் பிரச்னைகளை தீர்த்து வைப்பார். அதை பார்த்து வளர்ந்த எனக்கும் சமூகத்தின் மீது அக்கறை பிறந்தது. சிறு வயதிலேயே சமூக சீர்கேடுகளை எதிர்த்து சிறியளவில் போராடியுள்ளேன்.


சமூக பிரச்னைகள் குறித்து யூ டியூப் தளங்களில் பேசுவது?

நான் எப்போதும் நேர்மை, உண்மை தவறியதில்லை. யார் தவறு செய்தாலும் தைரியமாக சுட்டி காட்டுவேன். நிறைய இடங்களில் பயணிப்பதால் சில விஷயங்களை பேசுகிறேன். ‛இந்த காலத்தில் யார் இப்படி பேசுவார்' என யூ டியூப் தளத்தினர் என்னை பேட்டி காண்கிறார்கள். வெளிப்படையாக பேசுவதால் என்னவெல்லாம் கேட்க வேண்டுமோ அதை கேட்டு காணொலியை பரப்பி பிரபலமாக்கி வருகிறார்கள்.


இயக்குனர், நடிகர் என்பதை தாண்டி பார்த்திபன் குறித்து?

நான் 12ம் வகுப்பு படிக்கும் போது இயக்குனர் பார்த்திபனை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அவரது நையாண்டி கலந்த பேச்சு பிடித்தது. என் எழுத்துக்களை எடுத்து என்னையே நுணுக்கமாக மாற்றிக்கொள்ள என்னிடம் கூறியிருக்கிறார். அந்த நுணுக்கத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என தெரியாது. அவரிடம் ஒரு காந்த சக்தி இருக்கிறது. மூடி மறைத்து பேசுவதை அவர் எதார்த்தமாக பேசுவார்.


‛நிழலின் நிஜம்' பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல்...?

நான் நடிக்கிறேன் என முன்பே அவருக்கு தெரியாது... சமீபத்தில் போனில் பேசும்போது ஷூட்டிங்கில் இருக்கிறேன் என நான் கூறியபோது தான் நானும் நடிப்பது அவருக்கு தெரியவந்தது. என் படத்தில் நல்ல வாய்ப்பு தருகிறேன் என அப்போது கூறியது போலவே இரவின் நிழல் படத்தில் கேரக்டர் கொடுத்தார்.


குழந்தையுடன் நிஜ பிணமாகவே நடித்த அந்த அனுபவம்?

அந்த காட்சியில் நான் பிணமாக தான் கிடந்தேன். ஏ.ஆர்.ரஹ்மான் வந்தபோது ‛இது பொம்மையா' என கேட்டார். அந்த அளவு தத்ரூபமாக நடித்ததில் பெருமை. மேக்கப் மேனிடம் போட்டோ எடுக்க நான் கேட்ட போது ‛உங்களை பார்த்தாலே அழுகை வருது' என மறுத்தார். தாயாக குழந்தை பால் குடிக்கிறது என்ற மனநிலை தான் இருந்ததே தவிர வேறு உணர்வுகள் இல்லை. குழந்தையின் கைகளை என் மார்பில் வைக்க படாதபாடு பட்டேன்.


இந்த சமூகம் இன்னும் எப்படியெல்லாம் மாற வேண்டும்?

நிறைய மாற வேண்டும்... எந்த செயலையும் உண்மையாக செய்ய வேண்டும். பெண் கல்வி சுதந்திரம் வேண்டும். இந்த காலத்தில் ஆண்கள் இயந்திரங்களாகவே மாறி விட்டனர். 10 நாட்கள் விடுப்பு எடுத்து, விரும்பி சினிமாக்களை பார்க்க வேண்டும் என்றால் கூட முடியாது. கருத்து சுதந்திரம் கூட முழுமையாக இல்லை. இன்னும் நிறைய தூரம் நாம் பயணிக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
25-ஜூலை-202218:53:15 IST Report Abuse
sankar கதைக்காக என்று சொல்லி சதையை காட்டுவது எந்தவகை சுதந்திரம் - வக்கிரம் என்று தோன்றவில்லையா - பாதிப்பால் கதை தலைப்பை வைத்தே அவரையும் உன்னையும் அடிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X