புதுடில்லி: அக்னிபத் குறித்த பிரதமரின் புதிய ஆராய்ச்சியால், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் 60,000 ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அதில் வெறும் 3000 பேருக்குத்தான் அரசு வேலை கிடைக்கிறது. 4 வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் ஆயிரக்கணக்கான அக்னிவீரர்கள் எதிர்காலம் என்ன?

பிரதமரின் இந்த புதிய ஆராய்ச்சியால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.