வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வயநாடு : 'கேரளாவில், 'ஆப்ரிக்கன் ஸ்வைன்' காய்ச்சல் பரவியுள்ள பண்ணைகளில் உள்ள பன்றிகளை கொல்வதற்கு முன், மாநில அரசு சில நாட்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்' என, விவசாய சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.
பீஹார் மற்றும் வடகிழக்கில் சில மாநிலங்களில் பன்றிகளுக்கு, 'ஆப்ரிக்கன் ஸ்வைன்' காய்ச்சல் பரவியுள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் எச்சரித்தது. இதையடுத்து, கேரளாவில் உள்ள பன்றி பண்ணைகளில் இருந்து கழிவுகளை வெளியேற்ற பாதுகாப்பு வழிமுறைகளை மாநில அரசு கடைப்பிடிக்க துவங்கியது.
![]()
|
இந்நிலையில், வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் உள்ள இரண்டு பன்றி பண்ணைகளில், ஆப்ரிக்கன் ஸ்வைன் காய்ச்சல் பரவி இருப்பது, சமீபத்திய பரிசோதனையில் தெரியவந்தது. ஒரு பண்ணையில், பாதிக்கப்பட்ட 40 பன்றிகள் உயிரிழந்தன. மற்றொரு பண்ணையில், சில பன்றிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைஅடுத்து, இரண்டு பண்ணைகளிலும் உள்ள அனைத்து பன்றிகளையும் கொல்ல கேரள அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பன்றிகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவற்றை கொல்வதற்கு முன் சில தினங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும், விவசாய சங்கத்தினர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.