வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா : பீஹாரில், 'வாட்ஸ் ஆப்' குழு வாயிலாக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவருக்கு கத்தார் நாட்டில் இருந்து, 'கிரிப்டோ கரன்சி' வாயிலாக நிதி அளிக்கப்பட்டது தெரியவந்து உள்ளது.
பீஹாரின், புல்வாரி ஷரீப் என்ற இடத்தை சேர்ந்தவர் மார்கவ் அகமது டானிஷ், 26. இவர், காஸ்வா - இ - ஹிந்த் மற்றும் 'டைரக்ட் ஜிகாத்' என்ற பெயரில், இரு 'வாட்ஸ் ஆப்' குழுக்களை நடத்தி வந்தார். இந்த குழு வாயிலாக, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பி வந்தார். இவரை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர்.
![]()
|
இவரிடம் நடத்திய விசாரணையில், மேற்காசிய நாடான கத்தாரை சேர்ந்த அல்பால்ஹி என்ற அமைப்பிடம் இருந்து, 'கிரிப்டோ கரன்சி' வடிவத்தில் நிதி அளிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹரீக் - இ - லப்பாய்க் என்ற அடிப்படைவாத குழுவுடனும், பாக்.,கைச் சேர்ந்த பைஸான் என்பவருடனும் டானிஷ் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது.