வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாக்பூர் : நாக்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுவனை அமெரிக்க நிறுவனம் ஒன்று, 33 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு பணியமர்த்தியும், அவரால் பணியில் சேர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவன் வேதாந்த் தியோகேட், இணையதள வடிவமைப்பு தொடர்பான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட 'இன்ஸ்டாகிராம்' இணையதள வடிவமைப்புக்கான போட்டி குறித்த விளம்பரத்தைப் பார்த்துள்ளார்.இரண்டு நாட்களுக்குள் 2,000க்கும் மேற்பட்ட 'கம்ப்யூட்டர்' கோடுகளை எழுதி போட்டியில் பங்கேற்ற வேதாந்த், அதில் வென்றார்.
![]()
|
1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தப் போட்டியில் வென்ற வேதாந்த்தை, அமெரிக்க நிறுவனம் தங்களது மனிதவள மேம்பாட்டுக் குழுவில், ஆண்டுக்கு 33 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்ற தேர்வு செய்தது. துரதிர்ஷ்டவசமாக வேதாந்துக்கு 15 வயதுதான் ஆகியுள்ளது என்பதை அறிந்த அந்நிறுவனம், வேலைவாய்ப்பை திரும்பப் பெற்றது.
இருப்பினும், அந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில், 'நம்பிக்கை இழக்க வேண்டாம். உங்கள் அனுபவம், தொழில்முறை மற்றும் அணுகுமுறை ஆகியவற்றால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம். 'பள்ளிக் கல்வியை முடித்த பின் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்' என, வேதாந்திடம் உறுதி அளித்துள்ளது.