ஜாதி சான்றிதழ் கொடுங்க: பிராமணர் சங்கம் கோரிக்கை

Added : ஜூலை 25, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
தஞ்சாவூர் : 'மத்திய அரசு வேலை வாய்ப்புகளுக்காக, தமிழக பிராமணர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்' என அகில பாரத பிராமணர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தஞ்சாவூரில், நேற்று, அகில பாரத பிராமணர் சங்கத்தின் தென்னிந்திய நிர்வாகிகள் பதவி ஏற்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தென்னிந்திய தலைவராக பொறுப்பேற்ற வக்கீல் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.காஞ்சி காமகோடி
தமிழக பிராமணர்கள், ஜாதிச் சான்றிதழ் , பிராமண இளைஞர்கள், Tamil Nadu Brahmins, Brahmin Youth,

தஞ்சாவூர் : 'மத்திய அரசு வேலை வாய்ப்புகளுக்காக, தமிழக பிராமணர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்' என அகில பாரத பிராமணர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில், நேற்று, அகில பாரத பிராமணர் சங்கத்தின் தென்னிந்திய நிர்வாகிகள் பதவி ஏற்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தென்னிந்திய தலைவராக பொறுப்பேற்ற வக்கீல் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.காஞ்சி காமகோடி பீடத்தின் என்.ஆர்.ஐ., அமைப்பின் பன்னாட்டுத் தலைவர் சுந்தர்ராம், சங்கரா கல்வி குழுமத் தலைவர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில பாரத தலைவர் கே.சி.கவுர், செயல் தலைவர் ரவீந்தர் குமார் சர்மா ஆகியோர் பங்கேற்றனர்.



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன: தமிழகத்தில் திருமணமாகாத பிராமண இளைஞர்கள் அதிகம் இருப்பதாலும், வட இந்தியாவில் பிராமண பெண்கள் அதிகம் இருப்பதாலும், இரு தரப்பினரும் பயன்பெறும் வகையில், ஆண்டுக்கு இரு முறை தமிழகத்தில் சுயம்வரம் நடத்தப்பட உள்ளது. பொருளாதாரத்தில் நலிவுற்ற பிராமணர்கள், மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் பயன்பெறும் வகையில், தமிழக பிராமணர்களுக்கு, தமிழக அரசு சார்பில் ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.



பிற மாநில பிராமணர்கள் ஜாதிச் சான்றிதழ்கள் பெற்றிருப்பதால், மத்திய அரசு பணியில் சேர்ந்து விடுகின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள பிராமணர்களுக்கு ஜாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும்.தமிழக கோவில்களில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் பணியிடங்களுக்கு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஆகம விதிப்படி அர்ச்சர்களை நியமித்து, அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
25-ஜூலை-202211:58:02 IST Report Abuse
Rajarajan வறுமைகோட்டின் கீழ் இருப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் தவிர, மற்றவருக்கு அரசின் இடவொதுக்கீடு சலுகைகள் என்பது தேவையற்றது. இது எல்லா மதத்துக்கும் பொருந்தும். அதுவும் ஒரு தடவை வறுமைக்கோட்டின் கீழ் இருப்பவர் அரசின் இடவொதுக்கீடு சலுகை பெற்றிருப்பின், அவரின் வாரிசுகளுக்கு அதை மீண்டும் கொடுப்பதை தவிர்க்கவேண்டும்.
Rate this:
raja - Cotonou,பெனின்
25-ஜூலை-202214:52:50 IST Report Abuse
rajaகொள்ளை கூட்டம் சண்டைக்கு வருமே.........
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
25-ஜூலை-202210:55:51 IST Report Abuse
தமிழ்வேள் அரசு சலுகை கிடைக்கிறது, இல்லை என்பது வேறு விஷயம் .... சாதி சான்றிதழ் என்பது, ஒருவன் பிறந்த சாதியை குறிப்பிட்டு கொடுக்கப்படுவது.. அப்படி இருக்கும்போது, பிராமணர் என்று குறிப்பிட்டு ஜாதி சான்றிதழ் தருவதில் அரசுக்கு என்ன தயக்கம்? எப்படியும் வருவாய் துறையினருக்கு மாமூல் கையூட்டு வாங்க மேலதிக வாய்ப்புகள் ஏற்படும் .....பிராமணர் என்ற சாதி சான்றிதழ் கொடுப்பதில் தவறே இல்லை ....தாராளமாக கொடுக்கலாம் ....
Rate this:
Cancel
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
25-ஜூலை-202210:32:08 IST Report Abuse
Sidhaarth என்னன்னு சாதி சான்றிதழ்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X