திருவள்ளூர்: திருவள்ளூரில், அரசு உதவி பெறும் தனியார் பள்ளியின் விடுதியில் பிளஸ் 12 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருத்தணி மாவட்டம் தெக்களூரை சேர்ந்த சரளா (17). இவர், திருவள்ளூர் மாவட்டம் மப்பெடு அருகே உள்ள கீழச்சேரி சேக்ரட் ஹார்ட் அரசு உதவி பெறும் பள்ளியில், பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளிக்கு சொந்தமான செயின்ட் ஆன்ஸ் ஹோம் பார் சில்ரன் என்ற விடுதியில் தங்கி இருந்தார். இன்று காலை நண்பர்கள் உணவு அருந்த சென்ற பின் தனது அறையில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பள்ளி நிர்வாகம் முறையான தகவல் அளிக்காத காரணத்தால், மாணவியின் உறவினர்கள், திருத்தணி சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். மறியலை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவியின் உடல் பிரதே பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலையை தொடர்ந்து, இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.