ஆசிரியர்கள் மொபைல் போன் கொண்டு வர தடை; வருகைப் பதிவில் சிக்கல்

Added : ஜூலை 26, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை : அரசு பள்ளி ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால், 'எமிஸ்' தளத்தில் வருகைப்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.'ஆசிரியர்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் வகுப்பறையில், மொபைல் போன்களை பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, சமீபத்தில்
Govt School, Teachers, Mobile Ban

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : அரசு பள்ளி ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால், 'எமிஸ்' தளத்தில் வருகைப்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

'ஆசிரியர்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் வகுப்பறையில், மொபைல் போன்களை பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, சமீபத்தில் பள்ளிக் கல்வித் துறையால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு, ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


ஏனென்றால், அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும், பள்ளிக்கு மொபைல் போன் கட்டாயம் எடுத்து வருமாறு, ஏற்கனவே பள்ளிக் கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது. அதாவது, எமிஸ் என்ற பள்ளிக் கல்வி துறையின் மொபைல் போன் செயலியில், மாணவர்களின் தினசரி வருகைப்பதிவை, தினமும் வகுப்பறையில் இருந்தபடி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.



அதே போல், ஆசிரியர்களின் வருகையையும், தலைமை ஆசிரியர்கள் மொபைல் போன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் செய்வதற்கு, வகுப்பறையில் ஆசிரியர்கள் மொபைல் போனை பயன்படுத்தியாக வேண்டும். இந்நிலையில், ஆசிரியர்கள் வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தினால், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருப்பது, முரண்பாடாக உள்ளதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

Shankar - Hawally,குவைத்
26-ஜூலை-202211:52:12 IST Report Abuse
Shankar அதற்க்கு பெயர் தான் திராவிட மாடல் அரசு. ஒட்டு போட்டீங்க இல்ல.... நல்லா அனுபவிங்க.
Rate this:
Cancel
MANOKARAN - CHENNAI,இந்தியா
26-ஜூலை-202211:21:10 IST Report Abuse
MANOKARAN தினமலர் வாசகர்கள் வணக்கம் சில மத்திய அரசு பள்ளியில் மொபைல் போன் (குறிப்ப மாணவிகள்) கொண்டு போகிறார்கள் அதுவும் சென்னையில் அரசு மற்றும் பெற்றோர் கவனிக்கவும்
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
26-ஜூலை-202210:07:24 IST Report Abuse
Rengaraj ஒருபுறம் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மொபைல் போன் மூலம் பல செயலிகளில் மாணவர் சம்பந்தப்பட்ட பதிவுகளை ஏற்ற சொல்லி கடுமை காட்டப்படுகிறது. உதாரணம் வருகை, மதிப்பெண்கள், மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள், வாட்ஸாப்ப் மூலம் சுற்றறிக்கை, மாணாக்கர்களின் நலத்திட்டங்கள் சார்ந்த பதிவுகள், மாவட்டம் மாநில அளவில் மாணவர்களுக்காக நடக்கும் போட்டிகளுக்கான விவரங்கள், பயிற்சி விவரங்கள் இப்படி ஆசிரியர்கள் பள்ளி நேரத்தில் உபயோகப்படுத்த கட்டாயமாக்குகிறார்கள். ஆசிரியர் வருகையும் தலைமை ஆசிரியரால் செயலி மூலம் ஏற்றப்படுகிறது. மறுபுறம் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். குழப்பமடைவது ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் இந்த மாதிரி ஆபீஸ் கிளார்க் வேலை பார்ப்பதை நிறுத்தி ஒழுங்காக பாடம் மட்டுமே எடுக்க வேண்டும். அதற்கு உயரதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X