காதலை கைவிட மறுத்த இளைஞர் கொலை: இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஜூலை 26, 2022 | Added : ஜூலை 26, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
காதலை கைவிட மறுத்த இளைஞர் கடத்தி கொலை: இருவர் கைதுசிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளி மாணவியை காதலித்தவரை, கடத்தி கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.விஸ்வநத்தம் புதுார் வைரமுத்து மகன் முத்துக்குமார், 19. இவரை,இரு நாட்களுக்கு முன் முருகையாபுரத்தை சேர்ந்த பாண்டித்துரை, மாரீஸ்வரன், ஆறுமுகம், பெரியசாமி ஆகியோர் அடித்து,'டூ-வீலரில்'கடத்தி
Crime, Murder, Police, Arrested, Theft, Robbery,காதலை கைவிட மறுத்த இளைஞர் கடத்தி கொலை: இருவர் கைது


சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளி மாணவியை காதலித்தவரை, கடத்தி கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.விஸ்வநத்தம் புதுார் வைரமுத்து மகன் முத்துக்குமார், 19. இவரை,இரு நாட்களுக்கு முன் முருகையாபுரத்தை சேர்ந்த பாண்டித்துரை, மாரீஸ்வரன், ஆறுமுகம், பெரியசாமி ஆகியோர் அடித்து,'டூ-வீலரில்'கடத்தி சென்றனர்.

கடத்தியவர்களைபோலீசார் தேடிவந்த நிலையில் முத்துக்குமார் தெற்கு ஆனைக்குட்டம் காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.போலீசார் கூறியதாவது:அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியை முத்துக்குமார்காதலித்து வந்துள்ளார். மாணவியின் உறவினர்கள் கண்டித்தும் கேட்காததால்,கடத்திச்சென்று கொலை செய்திருக்கலாம். மேல்விசாரணை நடக்கிறது.இவ்வாறு கூறினர்.இந்நிலையில் நேற்று மாலை விஸ்வநத்தம் பாண்டித்துரை, 27, மாரீஸ்வரனை, 21, போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை விசாரித்து வருகின்றனர்.


ஸ்டேஷனில் அலைபேசி திருட்டு; இரு போலீசாரிடம் விசாரணைராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் வழக்கில் தொடர்புடைய அலைபேசி திருடு போனது தொடர்பாக இரு போலீஸ்காரர்களிடம் விசாரணை நடக்கிறது.ராமநாதபுரம் ஆயுதப்படையில் பணிபுரிந்த அசோக்குமார் கடந்தாண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்தனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. வழக்கு சம்பந்தப்பட்ட பொருட்களை ஒப்படைக்க சி.பி.சி.ஐ.டி.,யினர் கேட்டனர். அசோக்குமார் அலைபேசியை கேணிக்கரை போலீசார் பறிமுதல் செய்து பாதுகாப்பாக வைத்திருந்தனர். தற்போது அது திருடுபோனதாக கூறினர்.சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர்.

அலைபேசியை வைத்திருந்தவர் அடையாளம் காணப்பட்டார். அவரிடம் விசாரித்த போது அலைபேசியை ஒரு கடையில் வாங்கியதாக கூறினார். அந்தக்கடைகாரரிடம் விசாரித்தபோது கேணிக்கரை போலீசார் ரூ.2 ஆயிரத்திற்கு வழங்கியதாக கூறினார். இதுதொடர்பாக டி.எஸ்.பி., ராஜா, இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் எழுத்தர் சுரேஷ், ஏட்டு கமலக்கண்ணனிடம் விசாரித்தனர்.இதுபோல தொழிலதிபர் மகள் காதல் விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட நகைகள் அபகரிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.


மயக்க மருந்து கொடுத்து3 பவுன் நகை 'அபேஸ்'பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து மூன்று பவுன் நகை திருடிய பெண்ணை, மேற்கு போலீசார் தேடுகின்றனர்.பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி போஸ்டல் வீதியைச் சேர்ந்த சரஸ் என்கிற முத்துலட்சுமி,60, பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு, சமீபத்தில் பழக்கமான பெண் ஒருவர் அவ்வப்போது வந்து பூ கட்டி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், மூதாட்டி வீட்டுக்கு சென்ற அந்த பெண், ஜூஸ் போட்டு தருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு, மூதாட்டியும் சரியென கூறியுள்ளார். ஜூஸ் குடித்த மூதாட்டி மயங்கியதும், கருத்தில் அணிந்திருந்த செயின், ஒரு செட் தோடு, மோதிரம் என மூன்று பவுன் நகையை 'அபேஸ்' செய்து மாயமானார்.மயக்கம் தெளிந்த பின், நகை திருடிச் சென்றது மூதாட்டிக்கு தெரியவந்தது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில், மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு, அப்பெண்ணை தேடுகின்றனர்.


மனைவியின் கள்ளத்தொடர்பு விரக்தியில் கணவர் தற்கொலை


கொப்பால் : மனைவியின் மோசமான நடத்தையால், மனம் வருந்திய கணவர் விஷம் குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.கொப்பாலின், சிக்க சிந்துாகி கிராமத்தில் வசித்தவர் நீலகண்டய்யா தனகுன்டிமடா, 45. இவரது மனைவி கவி சித்தம்மா, 38. இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த வீரய்யா ஹிரேமட், 40, என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.


latest tamil newsஇதனால் தம்பதி இடையே தினமும் தகராறு நடந்தது.குடும்பத்தின் மூத்தவர்கள், ஊர் பெரியவர்கள் சேர்ந்து, புத்திமதி கூறியும், கவி சித்தம்மா திருந்தவில்லை.மனைவியின் நடத்தையால் மனம் நொந்த நீலகண்டய்யா தனகுன்டிமடா, நேற்று முன்தினம் மாலை, தன் நிலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.ஆளவன்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 ரவுடிகள் கைது; ஒருவருக்கு வலைவில்லியனுார் : வில்லியனுார் அருகே எதிரியை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு தயாரித்த இரு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு ரவுடியை தேடி வருகின்றனர்.மேற்கு எஸ்.பி., ஜிந்தாகோதண்டராமன் உத்தரவின்பேரில் வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரவுடிகளின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் ஒதியம்பட்டு-மணவெளி தாங்கல் சாலை, சிவா நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தப்பியோட முயன்ற மூவரில் இருவரை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் நின்றிருந்த பகுதியில் சோதனை செய்ததில் இரு கத்திகள், வெடிகுண்டு தயாரிப்பதற்கான வெடி மருந்து, இரும்பு பால்ரஸ், கூழாங்கற்கள், நுால்கண்டு உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இருவரையும் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.


latest tamil news
அதில், கோபாலன்கடை, அம்மா நகர் லாரன்ஸ் மகன் அப்பு(எ) ஆன்ட்ரஸ் சேவியர்,30, கணுவாப்பேட்டை புதுநகர் நான்காவது தெருவை சேர்ந்த சண்முகம் மகன் தமிழ்(எ) தமிழ்செல்வன், 23, என தெரியவந்தது. அப்பு மீது கொலை முயற்சி வழக்கும், தமிழ்செல்வன் மீது கொலை வழக்கும் உள்ளது. இந்நிலையில் அப்புவிற்கும், அம்மா நகரை சேர்ந்த சதீஷ்க்கும் தொடர்ந்து முன்விரோதம் இருந்து வருகிறது. இதனால் அப்பு, ரெட்டியார் பாளையம் பகுதிக்கு இடம்மாறி வாடகை வீட்டில் வசிக்கிறார்.சில வாரங்களுக்கு முன் பவழ நகர் பகுதியில் நடந்து சென்ற அப்புவை, சதீஷ் ஓட ஓட விரட்டி தாக்க முயன்றார். அவரிடம் பிடிபடாமல் அப்பு தப்பிச் சென்றார். அதனால் சதீஷை கொலை செய்ய திட்டமிட்டு, பவழ நகரை சேர்ந்த நண்பர் கணபதி உதவியை நாடினார்.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன் கஞ்சா வழக்கில் அரியாங்குப்பத்தில் சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வரும் சதீஷை கொலை செய்ய அப்பு திட்டமிட்டுள்ளார். நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் கைதேர்ந்த முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகர் ரங்கநாதன் மகன் பூபதி(30), உட்பட மூவரும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வெடிகுண்டு தயாரிக்க முயன்றது தெரியவந்தது. இருவரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய ரவுடி பூபதியை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


ரூ.20,000 லஞ்சம்: வி.ஏ.ஓ., சிக்கினார்
சென்னை : கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 38. இவர், பட்டா பெயர் மாற்றம் செய்ய, சோழிங்கநல்லுார் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளார்.தாசில்தார், உத்தண்டி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், 51, என்பவரிடம் அனுப்பி வைத்துள்ளார்.

அங்கு 'பட்டா பெயர் மாற்றும் பணிகளை விரைந்து முடிக்க, 20 ஆயிரம் ரூபாய் தர வேண்டும்' என ரமேஷ் கூறி உள்ளார்.இது குறித்து ராஜேஷ், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாயை ராஜேஷிடம் கொடுத்து அனுப்பினர்.நேற்று, ராஜேஷிடம் இருந்து, 20 ஆயிரம் ரூபாயை ரமேஷ் வாங்கினார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரமேஷை கையும் களவுமாக கைது செய்தனர்.


கல்லுாரி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சிவிக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தனியார் கல்லுாரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம், மணி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 47; வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ரம்யா, 18. விக்கிரவாண்டி தனியார் பார்மசி கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.பார்ம்., படிக்கிறார்.இவர் நேற்று காலை 10:30 மணிக்கு கல்லுாரி கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில், மாணவிக்கு இடுப்பு மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏ.எஸ்.பி., அபிஷேக் குப்தா தலைமையில், ஏராளமான போலீசார் கல்லுாரி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.மாணவிக்கு ஆறுதல் கூற வந்த சில அரசியல் கட்சி பிரமுகர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.


கடிதம் சிக்கியதுமாணவி ரம்யாவின் பையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் உள்ள விபரங்களை போலீசார் வெளியிடவில்லை.சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கணியாமூர் பள்ளியில் மாணவி மர்ம மரணம் தொடர்பாக கலவரம் வெடித்தது. அப்பிரச்னை அடங்குவதற்குள் தனியார் கல்லுாரியில் மாணவி தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
26-ஜூலை-202220:16:36 IST Report Abuse
தமிழன் சினிமால பொறுக்கி மாதிரி வேல வெட்டி இல்லாத ஒரு பையன் லட்டு மாதிரி ஒரு பொண்ண வெரட்டி வெரட்டி காதலிப்பானாம், மொதல்ல ஒத்துக்காத அந்த பொண்ணு படம் முடியுரப்ப பொறுக்கி மூஞ்சி பையனோட பெல்வேறு தியாகங்கள பாத்து உருகிப்போயி காதலிச்சுருவாளாம். இதுதான் தமிழ் சினிமா.
Rate this:
Cancel
Vijai - chennai,இந்தியா
26-ஜூலை-202218:37:42 IST Report Abuse
Vijai திறந்த வெளி வகுப்புகள் நடத்தினால் தான் மாணவிகள் தற்கொலை செய்வது தடுக்கப்படும்.
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
26-ஜூலை-202218:25:20 IST Report Abuse
R S BALA காதலால் அல்ப ஆயுசு..கொடுமை, பருவ வயதை ஒரு ஆணும் பெண்ணும் பக்குவமாக கடக்க பெற்றவர்களே பொறுப்பு, வாலிப வயது கூரிய கத்தி போல எச்சரிக்கையுடன் இல்லையெனில் அது தன்னையே வெட்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X