திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம், கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதி அறையில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி துாக்கிட்டு நேற்று (ஜீலை 25) தற்கொலை செய்தார். மாணவியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு இன்று (ஜூலை 26) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த தெக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் சரளா, 17. இவர் பள்ளி விடுதி அறையில் நேற்று (ஜீலை 25) தற்கொலை செய்து கொண்டார். இவர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மாணவியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு இன்று (ஜூலை 26) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வழக்கு சி.பி.சி.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் மாணவியில் உடற்கூர் ஆய்வு முடிந்துள்ளது.