வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். புதிதாக பொறுப்பேற்ற பின்னர் நடந்த முதல் சந்திப்பு இதுவே.

நேற்று பார்லி.,யில் திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்று கொண்டார். அவரது சொந்த மாநிலமான ஒடிசாவில் மக்கள் மேள, தாளம் முழங்க கொண்டாடினர். நேற்றைய பதவியேற்பில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டது.

இன்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இருவரும் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்.