திருப்பூர்:நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, திருப்பூரில் இருந்து இன்று இரவு ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.நாளை ஆடி அமாவாசை என்பதால், முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பனம் வழங்க செல்லும் பக்தர்கள் வசதிக்காக, திருப்பூர் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, திருமங்கலம் வழியாக ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.இன்று இரவு, 7:00 முதல், 10:00 மணி வரை சிறப்பு பஸ்கள் இயங்கும். திருப்பூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு பயணி ஒருவருக்கு கட்டணம், 280 ரூபாய். முன்பதிவு இல்லை. பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு இன்று இரவு முதல் நாளை மதியம் வரை பஸ் இயக்கப்பட உள்ளது, என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.