திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வது வார்டு பாலாஜி நகர் பகுதி. நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ள இப்பகுதியில் உரிய தார் ரோடு வசதியில்லை.அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று முதல் வீதியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார் ரோடு அமைக்கப்படவுள்ளது. இதற்கான, பூமி பூஜை நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார்.துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல குழு தலைவர்கள் பத்மநாபன், கோவிந்தசாமி, கவுன்சிலர் கோமதி, உதவி கமிஷனர் வாசுக்குமார் முன்னிலை வகித்தனர்.பூமி பூஜையை தொடர்ந்து உடனடியாக புதிய ரோடு அமைக்கும் பணி துவங்கியது. பணியை விரைந்தும் தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டுக்கு விட அறிவுறுத்தப்பட்டது.