அரசியல் கட்சிகள் இலவசம் அறிவிப்பது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி!

Added : ஜூலை 27, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
புதுடில்லி: 'தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதை தடுக்க உரிய நிலைப்பாட்டை எடுப்பதில் மத்திய அரசுக்கு என்ன தயக்கம்' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.தேர்தல்களின்போது ஓட்டுகளைப் பெற அரசு பணத்தில் இருந்து இலவச பொருட்களை வழங்குவதாக அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன. இதை தடுத்து நிறுத்தக் கோரியும், அவ்வாறு இலவச அறிவிப்பு வெளியிடும்
அரசியல் கட்சிகள் இலவசம் அறிவிப்பது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: 'தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதை தடுக்க உரிய நிலைப்பாட்டை எடுப்பதில் மத்திய அரசுக்கு என்ன தயக்கம்' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தேர்தல்களின்போது ஓட்டுகளைப் பெற அரசு பணத்தில் இருந்து இலவச பொருட்களை வழங்குவதாக அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன. இதை தடுத்து நிறுத்தக் கோரியும், அவ்வாறு இலவச அறிவிப்பு வெளியிடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் இருந்த மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கபில் சிபலின் கருத்தை அமர்வு கேட்டது.


latest tamil news


இதற்கு கபில் சிபல் கூறியதாவது: இந்த விவகாரத்தில் நிதி கமிஷன் தான் தலையிட முடியும். மாநிலங்களுக்கான நிதியை ஒதுக்கும்போது, அந்த மாநிலத்தின் மொத்தக் கடன் எவ்வளவு, எந்தளவுக்கு இலவசப் பொருட்கள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து நிதி கமிஷன் கேள்வி கேட்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.



இதையடுத்து அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளதாவது: இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. ஆனால், ஒரு நிலைப்பாட்டை எடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன். இதை ஒரு முக்கியமான பிரச்னையாக அரசு பார்க்கவில்லையா. இலவச அறிவிப்புகள் தொடர வேண்டுமா, வேண்டாமா. உங்களுடைய பதிலை தாக்கல் செய்யுங்கள். இந்த விவகாரத்தில் நிதி கமிஷனின் கருத்தை கேட்கலாமா என்பது குறித்தும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (23)

Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா
27-ஜூலை-202214:32:19 IST Report Abuse
Venkatasubramanian krishnamurthy அரசியல் கட்சிகள் அரசுப் பணத்திலிருந்து தரும் இலவச அறிவிப்புகளை தடை செய்யும் விதமாக மத்திய அரசு தனியாக சட்டம் கொண்டுவரலாம். மத்திய அரசு தயங்குவதாக இருந்தால் வழக்கம்போல் உச்ச நீதிமன்றமே இதில் முடிவு எடுத்து அறிவித்து விட்டால் அரசியல் கட்சிகளுக்கு யாரையும் குறை சொல்ல முடியாமல் போகும். இலவசங்கள் என்பது மக்கள் சேவை என்று கட்சிகள் உண்மைமிலேயே நினைத்தால் சொந்தக் கட்சி நிதியிலிருந்து செய்வதில் தவறு இருக்க முடியாது. இதனோடு சேர்ந்து எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் (அவர்கள் அப்பழுக்கற்றவர்களாகவே இருந்தாலும்கூட)அரசுப் பணத்திலிருந்து சமாதி முதற்கொண்டு நினைவுச் சின்னங்கள் அமைப்பதற்கும் தடை கொண்டு வரவேண்டும்.
Rate this:
Cancel
S Regurathi Pandian - Sivakasi,இந்தியா
27-ஜூலை-202212:13:26 IST Report Abuse
S Regurathi Pandian ஒரு சில நிறுவன முதலாளிகளுக்கு வரி சலுகைகளையும் கடன் தள்ளுபடியையும், அரசு நிலங்களை சொத்துக்களை வரி வழங்குவதையும் நீதி மன்றமோ, தேர்தல் ஆணையமோ கேட்பதில்லை. அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதையும் கேட்பதில்லை. ஆனால் பல லட்சக்கணக்கான மக்களுக்கு உதவி செய்வதை மட்டும் இலவசம் இலவசம் என்று கூப்பாடு போடுவது ஏன்? சொற்ப தொகையை மக்களுக்கு உதவுவதைக்கூட பொறுக்கமுடியவில்லையா?
Rate this:
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
27-ஜூலை-202212:02:29 IST Report Abuse
ராம.ராசு உண்மைதான் "இலவசம்" என்று அறிவிக்கக் கூடாதுதான். ஒருவர் தான் முதலீடு செய்து, பொருளை உற்பத்தி செய்து, அதை விற்பனை செய்யும்போது மட்டும் அரசுக்கு வாரியாக கட்டவேண்டியுள்ளது. முதலீட்டுக்கும் அரசு எந்த முதலீடும் செய்யவில்லை. அதை வீரபனை செய்வதற்க்கும் எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால் முதலீடு போட்டு, பொருளை உற்பத்தி செய்து, அதை விற்கும்போது மட்டும் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். என்றால், அரசுக்கும் மக்கள் தரும் அந்த வரி அரசுக்கு மக்கள் கொடுக்கும் இலவசம்தானே. பணம் இருக்கும் மக்களிடமிருந்து வரியாகப் பெற்று, இல்லாத, தேவைப்படும் மக்களுக்கு கொடுப்பதை இலவசம் என்று கொச்சைப் படுத்தக் கூடாதுதான். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக உயர் பதிவியில் இருப்பவர்களுக்கு, அவர்களுக்கான ஊதியம் தவிர்த்து, வாடகை இல்லாமல் வீடு, அரசு உதவி போக்குவரத்து வசதி, வெளி ஊர் பயணம் அதற்கான தினப்படிகள், குடும்பத்தோடு சுற்றுலா சென்றால் அவர்கள் தங்குவதற்க்கு அரசு செலவில் தங்குமிடம், உடபட இன்னும் பல வசதிகள் தரப்படுகின்றன. அவற்றையெல்லாம் அவர்களுக்கு இலவசமாக தருவதாகச் சொல்லுவது இல்லை. தேவை உள்ளவர்களுக்கு, குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு அரசு கொடுப்பதை "இலவசம்" என்று ஊதிப் பெரிதாக்கி செய்தியாக்கப்படுகிறது. அதற்க்கு நீதிமன்றம் கூட கேள்வி கேட்கிறது. பெரிய நிறுவனங்ககளுக்கு கோடிகளை மானியமாக அள்ளிக்கொடுப்பது, அதை வெறுமனே தள்ளுபடி என்று சொல்லுவது.... அதுவும் இலவசம்தானே... கோடிக்கணக்கில். ஒருவேளை, நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருந்தால் மக்களுக்கு இலவசம் கொடுக்கக் கூடாது என்று உத்தரவு போடலாம். தலைக்கவசம் கட்டாயம் என்று பொதுமக்களுக்கு அதிரடி உத்தரவு போதும் நீதிமன்றங்கள், சாலைகள் சரியாக ஏன் சரியாகப் பரமரிப்பது இல்லை என்று அரசை, ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்பது இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X