வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ''தி.மு.க., ஆட்சிக்கு வந்து 15 மாதங்களாகியும் எந்தவொரு முக்கியமான வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை,'' என, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததால் மின் கட்டணம் அதிகரித்துள்ளது. மத்திய அரசை மட்டுமே தி.மு.க., அரசு குற்றம் சாட்டுகிறது. பட்டாசு தொழில் முடங்கி லட்சகணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் நிலவுகிறது. சீனாவில் எவ்வாறு பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும்.தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலும் கவனம் செலுத்தி வேளாண் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
![]()
|
அரசு பரந்த நோக்கத்துடன் செயல்பட வேண்டும். நெல், பருத்தி கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்.மன அழுத்தங்களிலிருந்து மாணவர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இதனால் தற்கொலைகளை தடுக்க முடியும். கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும். தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காக புதிய தமிழகம் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் மூன்றாண்டுகளில் எம்.பி.க்கள் என்ன செய்தார்கள் என தெரியவில்லை. தி.மு.க., அ.தி.மு.க.,வால் இனி லோக்சபாவில் குரல் கொடுக்க முடியாது என்றார்.