பெங்களூரு: கர்நாடகாவின் தக்ஷின கன்னட பகுதியில் பா.ஜ., இளைஞரணியை சேர்ந்த பிரவீன் நீடரு என்பவரை, பைக்கில் வந்த மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களை கொண்டு சாகும் வரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, குற்றவாளிகள் நீதிபதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனக்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement