3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா ஆஜர்

Updated : ஜூலை 27, 2022 | Added : ஜூலை 27, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை விலைக்கு வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவிடம், அமலாக்கத்துறையினர் 3வது நாளாக இன்றும்(ஜூலை 27)விசாரணை நடத்தினர்.நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியா' நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்து உள்ளதாக,
sonia, soniagandhi, congress, national herald, enforcementdirectorate, சோனியா, சோனியா காந்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை விலைக்கு வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவிடம், அமலாக்கத்துறையினர் 3வது நாளாக இன்றும்(ஜூலை 27)விசாரணை நடத்தினர்.



நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியா' நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்து உள்ளதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார்.




வழக்குப் பதிவு


இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை கடந்தாண்டு இறுதியில் வழக்குப் பதிவு செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம், ஏற்கனவே விசாரணை நடந்தது.இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி, சோனியா மற்றும் ராகுலுக்கு, அமலாக்கத் துறை 'சம்மன்' அனுப்பியிருந்தது. இதன்படி, கடந்த மாதம் ஆஜரான ராகுலிடம், ஐந்து நாட்களில், 50 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.



இதற்கிடையே, கொரோனா தொற்று ஏற்பட்டதால், விசாரணைக்கு ஆஜராக சோனியா அவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது. புதிய சம்மனை ஏற்று, கடந்த 21ல், அவர் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 26ல் மீண்டும் ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டது.இதையேற்று, அமலாக்கத் துறை அலுவலகத்தில், சோனியா நேற்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். ஆறு மணி நேரம் விசாரணை நடந்தது. நேற்றைய விசாரணையின் போது, சோனியாவிடம், 28 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜாராகும் படி சோனியாவுக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி 3வது நாளாக சோனியா மீண்டும் ஆஜரானார். அவருடன் பிரியங்கா உடன் சென்றுள்ளார்.


latest tamil news



இன்றுடன் நிறைவு?

இதனிடையே, அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், விசாரணைக்கு சோனியா முழு ஒத்துழைப்பு வழங்குகிறார். அதனால், விசாரணை இன்றுடன் நிறைவு பெறலாம் என தெரிவித்துள்ளன.



போராட்டம்

சோனியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (13)

Visu - chennai,இந்தியா
28-ஜூலை-202202:49:24 IST Report Abuse
Visu கொரானா காலத்தில் இந்த திருட்டு கும்பல் ஆட்சியில் இருந்திருந்தால் நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது பல லட்சம் கோடியை தங்களுக்கு சொந்தமாக்கியிருப்பார்கள் ஆட்டையை போட முடியாமல் போனதால் தான் மோடி எதிர்ப்பு
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
27-ஜூலை-202215:32:10 IST Report Abuse
Kasimani Baskaran பக்கா கிரிமினல் மூளை உள்ள இந்த கோஷ்டிக்கு மூளையாக செயல்பட்ட அந்த வணிகரை தூக்கினால் எல்லாம் நிமிடத்தில் சரியாகிவிடும்.
Rate this:
Cancel
27-ஜூலை-202214:02:04 IST Report Abuse
ராமகிருஷ்ணன் குடும்ப சொத்து காங்கிரஸ் தலைவி சோனியா அம்மையார் இந்திய சட்டத்திற்கு உட்பட்டவர் தானே. பிறகு ஏன் இந்த லூசுகள் போராட்டம் செய்கின்றனர். நேரு குடும்பம் என்ன தவறு செய்தாலும் யாரும் எதுவும் கேட்க கூடாதா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X