நான் முடங்கிப்போகாதவன்..

Updated : ஜூலை 27, 2022 | Added : ஜூலை 27, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மூன்று வயதாகும் போது இளம்பிள்ளை வாதம் காரணமாக கால்கள் முடங்கிப்போனது ஆனால் அதையே காரணமாக வைத்து முடங்கிப்போகாமல் நண்பர்கள் உதவியுடன்இயற்கையை அனுபவித்துவருகிறார் கணேசன்.கடந்த வாரம் பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கு கூட்டமான கூட்டம், அந்த கூட்டத்தில் குளிப்பதற்காக கால்கள் முடங்கிப்போன ஒரு இளைஞரை இன்னோரு இளைஞர்முதுகில் சுமந்து கொண்டு வந்தார்,ஆனால் கூட்டlatest tamil news


மூன்று வயதாகும் போது இளம்பிள்ளை வாதம் காரணமாக கால்கள் முடங்கிப்போனது ஆனால் அதையே காரணமாக வைத்து முடங்கிப்போகாமல் நண்பர்கள் உதவியுடன்இயற்கையை அனுபவித்துவருகிறார் கணேசன்.
கடந்த வாரம் பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கு கூட்டமான கூட்டம், அந்த கூட்டத்தில் குளிப்பதற்காக கால்கள் முடங்கிப்போன ஒரு இளைஞரை இன்னோரு இளைஞர்முதுகில் சுமந்து கொண்டு வந்தார்,ஆனால் கூட்ட நெரிசலைப் பார்த்து இதில் எப்படி குளிப்பது என தயங்கி நின்று கொண்டிருந்தார்.


latest tamil news


இந்த காட்சியைப் பார்த்ததும், உடனடியாக அங்கு இருந்த போலீசாரிடம் நாம் உதவி கேட்க, அவரும் கூட்டத்தை ஒதுக்கி ஊனமுற்றவரை ஆசைதீர குளிக்கவைத்தார் அவரதுகுளியல் ஆனந்தத்தைப் பார்த்த பொதுமக்களும் அவரை தொந்திரவு செய்யாமல் தள்ளிநின்று குளித்தனர்.
குளித்து முடித்து சந்தோஷமாக வந்தவரை விசாரித்தோம்
திருச்செந்துார் பக்கம் உள்ள உடன்குடிதான் கணேசனுக்கு சொந்த ஊர் பூ வியாபாரம் செய்கிறார் சிறு வயது முதலே நம்மால் முடியாதது எதுவுமே இருக்கக்கூடாது என்றுகடுமையாக உழைக்கக்கூடியவர் தான் ஒரு ஊனமுற்றவன் என்று யாரும் அனுதாபம் காட்டக்கூடாது தனது உழைப்பிற்கு மதிப்பு கொடுத்தால் போதும் என்று சொல்பவர்.
இவருக்கு இயற்கை மீது அலாதி பிரியம் அதிலும் சீசன் நேரத்தில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிப்பது என்றால் அப்படியொரு ஆன;ந்தம் ஒவ்வொரு சீசனில் இரண்டுமூன்று முறை குற்றாலம் வந்து விடுவார்.
இவருக்கு உள்ளூரில் நண்பர்கள் பெரிய பலம் கணேசன் ஆசைப்பட்டால் அதை நிறைவேற்றிவைக்க உடனே தயராகிவிடுவர், கணேசனால் நடந்து போகமுடியாத இடத்திற்குமுதுகில் சுமந்து செல்வர் அன்று அவரை முதுகில் சுமந்துவந்தவர் அவரது நண்பர் இசக்கியாவார்.
இயற்கை குற்றாலத்தில் மட்டும்தான் அருவியாக விழுந்து ஆனந்தத்தை அள்ளி அள்ளிதருகிறது இதனை நாம் மட்டுமல்ல வரக்கூடிய தலைமுறையும்அனுபவிக்கவேண்டும் அதற்கேற்ப குற்றாலத்தின் சுற்றுச்சுழலை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்பதே தன் ஆசை என்றார்.
-எல்.முருகராஜ்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-ஜூலை-202214:29:29 IST Report Abuse
Lion Drsekar மிக அருமையான பதிவு ஐயா மீண்டும் தங்களுக்கு இருகரம் கூப்பி வணக்கம், பூவியாபாரம் செய்யும் கணேசன் அவர்களை நண்பர்கள் சுற்றுலா அழைத்துச்சென்று அதுவும் முதுகில் சுமந்து அவருக்கு மகிழ்ச்சி ஊட்டியது கண்டு நாங்களும் மகிழ்ச்சி அடைந்தோம். அன்னாருக்கு ஒரு சிறப்பு செய்தி அரசாங்கம் அவர்களுக்கு இலவச மூன்றுசக்கர நாற்காலி மற்றும் வியாபம் செய்ய கடைகள் மற்றும் பாட்டரியில் இயங்கும் மூன்றுசக்கர நாற்காலிகள் இலவசமாக வழங்குகின்றன. அதற்கான தகுதி சான்றிதழ்களை இணைத்து மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு அனுப்பினால் எல்லாவற்றிலும் முன்னுரிமை கொடுத்து வேலை வாய்ப்பு , சுயதொழில் வேலைவாய்ப்பும் கொடுக்கிறார்கள். எந்த உதவிக்கும் அரசாங்கம் தயாராக இருக்கிறது. இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள், நன்றி
Rate this:
Cancel
seenivasan - singapore,சிங்கப்பூர்
29-ஜூலை-202212:16:12 IST Report Abuse
seenivasan அருமையான கட்டுரை. நல்ல நண்பர்கள். அனைவரும் வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
29-ஜூலை-202205:47:11 IST Report Abuse
N Annamalai அருமையான நண்பர்கள் .வாழ்க வளர்க அன்புடன் .நீங்கள் அனைவரும் முன்பிறவி யில் நல்ல வினை ஆற்றி உள்ளீர்கள் என்பது உண்மை .தொடரட்டும் என்றும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X