"பொக்கிஷங்களை மதிப்பிட ஓராண்டு தேவை' : ஐவர் குழு அறிக்கை

Added : செப் 06, 2011 | கருத்துகள் (19)
Share
Advertisement
"பொக்கிஷங்களை மதிப்பிட  ஓராண்டு தேவை' :  ஐவர் குழு அறிக்கை

புதுடில்லி: "பத்மநாப சுவாமி கோவில், பாதாள அறைகளில் உள்ள, பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, ஓராண்டு காலம் தேவைப்படும்' என, ஐவர் குழு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த, இடைக்கால அறிக்கையில் தெரிவித்துள்ளது.


கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்திப் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள, பாதாள அறைகளில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை பார்வையிட்டு, மதிப்பீடு செய்ய, ஐவர் குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. டில்லியில், தேசிய அருங்காட்சியக துணை வேந்தர் டாக்டர் ஆனந்தபோஸ் தலைமையிலான இக்குழு, கோவிலில் பொக்கிஷங்களை பாதுகாப்பது உட்பட, பல்வேறு பணிகளை துவக்கி ஆய்வு செய்தது. பாதாள அறைகளை திறப்பது குறித்து, கோவிலை நிர்வகித்து வரும் அறக்கட்டளையும், திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும், தேவ பிரசன்னம் (சுவாமியின் கருத்து கேட்டல்) நடத்தினர்.


அதில், பாதாள அறைகளை திறந்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பி அறையை, மறு உத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. தேவ பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து, மன்னர் குடும்பத்தினர், சுப்ரீம் கோர்ட்டில், பாதாள அறைகளை திறக்க தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அம்மனு மீது, விசாரணை நடந்து வருகிறது.


இந்நிலையில், ஐவர் குழு, தன் இடைக்கால அறிக்கையை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், "கோவில் பாதாள அறைகளில் உள்ள, பொக்கிஷங்களை திறந்து, மதிப்பீடு செய்து முடிக்க, ஓராண்டு காலம் தேவைப்படும். மேலும், பிரச்னைக்குரிய கடைசி அறை (பி)யை இப்போது திறக்க மாட்டோம். மதிப்பீடு பணிகளுக்காக, 2 கோடியே, 99 லட்ச ரூபாய் ஒதுக்கவேண்டும்' என, குறிப்பிட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kartheesan - JEDDAH,சவுதி அரேபியா
07-செப்-201110:40:56 IST Report Abuse
Kartheesan புராதன பொருட்களின் சர்வதேச மதிப்பை அறிவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. ஆனாலும் ஒரு வருடம் என்பது மிக அதிகம். நிச்சயமாக இவர்கள் பல தடைகளை கடக்க வேண்டிருக்கும். யார் யார் விலை போவார்களோ கடவுளுக்குதான் வெளிச்சம். இவர்கள் ஏன் மதிப்பிடவேண்டும். வெளிசந்தையில் விற்கவா போகிறார்கள். இத்தனை ஆபரணங்கள், இத்தனை நவரத்தினங்கள், இத்தனை கொடைகள், யார் யாரால் கொடுக்கப்பட்டது என்று வகை பிரித்தால் போதாதா? இதற்கு மதிப்பு போட்டு எதை செய்ய போகிறார்கள்?
Rate this:
Share this comment
INDIAN - Singapore,சிங்கப்பூர்
07-செப்-201121:09:24 IST Report Abuse
INDIANவகை பிரித்தால் மட்டும் போதாது, கார்தீசன். We should know the value of gold and other precious stones, we, India, have. நம்ம கிட்டக்க இருந்த விலை மதிப்பில்லா பொருட்களை ஆட்டைய போட்டுதானே வெள்ளையன் இத்தனை நாட்களாக வளமாக இருந்தான். நேதாஜியா தேடுறேன் பேர்வழின்னு பத்மநாப சுவாமி கோவிலை அவன் சுத்தி வர காரணமும் அங்கிருந்த விலை மதிக்க முடியாத போகிஷதுக்காகததான். நம்ம கிட்டக்க இவ்வளவு gold இருக்குன்னா அந்த அளவுக்கு currencya நாம print pannikidalam. நமக்கு கிடைத்திருக்கும் ஆச்சர்ய மனசு பதற வைக்கும் தகவல் பத்மநாப சுவாமி சுரங்கங்களை சில பல ஆண்டுகளுக்கு முன்பே திறந்து விட்டனர் என்பது !!! நம்ம ஊரூ நகை கடை செட்டியார விட்ட ஒரு வாரததுல கண்ணாலா அளந்து இவ்வளுன்னு சொல்லிடுவாரு இதுக்கு எதுக்கு 1 வருஷம் !!! ஏதோ பிரம்மா ரகசியம் இதுல இருக்கு !!! Supreme Court Sir Do Some thing to save our treasure !!! Jai Hind !!!...
Rate this:
Share this comment
Cancel
VISWANTHAN KARTHIKEYAN - muscat,ஓமன்
07-செப்-201109:53:46 IST Report Abuse
VISWANTHAN KARTHIKEYAN பொக்கிஷங்களை மதிப்பிட ஓராண்டு தேவை' : ஐவர் குழு அறிக்கை-அந்த ஐவர குழுவை ரத்து cheyunka
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
07-செப்-201109:31:44 IST Report Abuse
JAY JAY " இதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன் யுவர் ஆனர் ! ஐவர் குழுவினரின் மேல் எனக்கு பலத்த சந்தேகம் உள்ளது...நியாப்படி பார்த்தால் ஐவர் குழுவில் தயாநிதி/கனிமொழி/அழகிரி/ஸ்டாலின்/கலாநிதி- ஆகியோர் தான் இருக்க வேண்டும்..அது தான் நியாயமும் கூட...ஏனென்றால் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கும், திருக்குவளை மன்னர் குடும்பத்துக்கும் நீண்ட நெடும் நட்பு உள்ளது என்பதை நமது கவிபேரரசுவே ஒரு பாராட்டு விழாவில் சுட்டி காட்டியுள்ளார்...அதனையே ஆதாரமாக கொண்டும் , நாங்கள் கூறும் இந்த ஐவர் குழுவுக்கு குஸ்பூ/நமீதா/வடிவேலு போன்ற உலக மகா முப்பிறவி கலை வல்லுனர்களின் ஆதரவும் இருப்பதாலும், ஐவர் குழுவை உடனேயே மாற்றி அமைக்குமாறு கணம் கோர்ட்டார் அவர்களை கேட்டு கொள்கிறேன்...தட்ஸ் ஆல் யுவர் ஆனர் ! "
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X