ரூபாய் நோட்டில் கையெழுத்துப் போடுபவருக்கே இவ்வளவு தான் சம்பளம்!

Updated : ஜூலை 27, 2022 | Added : ஜூலை 27, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
நாட்டின் முக்கிய உயர் பொறுப்புகளில் ஒன்று ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பு. தற்போது ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் உள்ளார். அவரது சம்பளம் மற்றும் துணை கவர்னர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவின் அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் செயல்பாட்டையும் கண்காணிக்கும் மத்திய வங்கியாக ரிசர்வ் வங்கி உள்ளது. இவ்வங்கியின் தலைமை பொறுப்பில்
DinamalarDotcom, Business, Economy, RBI, Currency, Shaktikanta Das, AnilkumarSharma, Girish chandra murmu, Om prakash mall, Signature, தினமலர்டாட்காம், ஸ்பெஷல், வர்த்தகம், ரூபாய்நோட்டு, ரிசர்வ்வங்கி, சக்திகாந்த தாஸ்,

நாட்டின் முக்கிய உயர் பொறுப்புகளில் ஒன்று ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பு. தற்போது ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் உள்ளார். அவரது சம்பளம் மற்றும் துணை கவர்னர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவின் அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் செயல்பாட்டையும் கண்காணிக்கும் மத்திய வங்கியாக ரிசர்வ் வங்கி உள்ளது. இவ்வங்கியின் தலைமை பொறுப்பில் கவர்னர் நியமிக்கப்படுவார். மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் அவர் பணியாற்றுவார். இந்தியாவின் நிதிக் கொள்கையை உருவாக்குதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பதில் ரிசர்வ் வங்கி கவர்னர் முக்கிய பங்கு வகிக்கிறார். மேலும் கிராமப்புற தொழில்கள், விவசாயம் மற்றும் குறு, சிறு தொழில்களுக்கு கடன் வழங்குவதை எளிதாக்குவது மற்றும் கண்காணிப்பது ஆகிய பணிகளை செய்கிறார்.latest tamil newsதற்போது ரிசர்வ் வங்கி கவர்னராக உள்ள சக்திகாந்த தாஸ் கடந்த நிதியாண்டில் மாதம் ரூ.2.5 லட்சம் ஊதியம் பெற்றுள்ளார். இவருக்கு முன்பு 2018 டிசம்பர் வரை கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேலும் இதே ஊதியம் பெற்றுள்ளார். 4 ஆண்டுகளாகியும் சம்பளம் உயரவில்லை. அதே போல் தற்போது உள்ள 4 துணை கவர்னர்களான எம்.டி.பத்ரா, எம்.ராஜேஷ்வர் ராவ், எம்.கே.ஜெயின், டி. ரபி சங்கர் ஆகியோர் மாதம் ரூ.2.25 லட்சம் சம்பளம் பெற்றுள்ளனர். மேலும், ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர்களான அனில் குமார் ஷர்மா, சிரிஷ் சந்திர முர்மு, ஓம் பிரகாஷ் மால் மற்றும் மிருதுல் குமார் சாகர் உள்ளிட்டோர் மாதம் ரூ.2.16 லட்சம் ஊதியம் பெற்றுள்ளனர்.latest tamil newsஇதே போல் பொதுத் துறை வங்கிகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் சம்பளமும் குறைந்த அளவே உள்ளது. எஸ்.பி.ஐ., சி.இ.ஓ., மாத சம்பளம் ரூ.3.19 லட்சம். பஞ்சாப் நேஷனல் வங்கி தவிர்த்து இதர டாப் 5 பொதுத் துறை வங்கி தலைமை அதிகாரிகளின் சம்பளமும் மாதம் ரூ.3.5 லட்சத்துக்குள் அடங்கும். இவர்களுடன் ஒப்பிடும் இந்தியாவின் டாப் 5 தனியார் வங்கியின் தலைமை அதிகாரிகளின் ஊதியம் இமலாய அளவிற்கு அதிகம் உள்ளது. மாதம் அவர்கள் ரூ.19 லட்சம் முதல் ரூ.59 லட்சம் வரை பெறுகின்றனர். உதாரணமாக எச்.டி.எப்.சி., சி.இ.ஓ.,வின் கடந்த நிதியாண்டின் சம்பளம் ரூ.19 கோடி ஆகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
31-ஜூலை-202212:48:29 IST Report Abuse
Bhaskaran ஓய்வு பெற்றபின் தனியார் நிறுவனத்தில் ஆலோசகராக இருந்து விட்டதை பிடிக்கலாம்
Rate this:
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
28-ஜூலை-202205:35:17 IST Report Abuse
பிரபு ஓரமா ஒக்காந்து ரூபாய் நோட்டில கையெழுத்துப் போடுறதுக்கு அந்த சம்பளம் போதும். கை வலிச்சா சொல்லுங்க வேற ஆளு ரெடியா இருக்கான் பாத்துக்கோங்க.
Rate this:
Cancel
28-ஜூலை-202205:30:32 IST Report Abuse
2ஆம் ஸ்டிக்கர் மன்னன் கஸ்டமர்களிடம் திருடும் வங்கிகளின் தலைவருக்கு இவ்ளோ சம்பளமா? கூப்பிடுங்க எங்க கார்பொரேட் குடும்ப கழகத்திற் , இந்த வங்கி பிசினஸில் ஈடுபட சொல்லுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X