மூத்த குடிமக்களுக்கான சலுகை: ரயில்வே அமைச்சகம் புது முடிவு

Added : ஜூலை 28, 2022 | கருத்துகள் (44) | |
Advertisement
புதுடில்லி: ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகையை பெறுவதற்கான வயது வரம்பை 70 ஆக உயர்த்தவும், குளிர் சாதன வசதி அல்லாத பெட்டிகளுக்கு மட்டும் சலுகை வழங்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ரயில் டிக்கெட் கட்டணத்தில் மாற்றுத் திறனாளிகள் உட்பட பல்வேறு பிரிவினர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இது போல, 50 விதமான சலுகைகள் நடைமுறையில்
Railways, Senior Citizens, IRCTC, Train, Indian Railways

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகையை பெறுவதற்கான வயது வரம்பை 70 ஆக உயர்த்தவும், குளிர் சாதன வசதி அல்லாத பெட்டிகளுக்கு மட்டும் சலுகை வழங்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



ரயில் டிக்கெட் கட்டணத்தில் மாற்றுத் திறனாளிகள் உட்பட பல்வேறு பிரிவினர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இது போல, 50 விதமான சலுகைகள் நடைமுறையில் உள்ளன. இவற்றின் வாயிலாக, ரயில்வே நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான சலுகையில், 60 வயதை கடந்த ஆண் மற்றும் திருநங்கை, நம்பிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 40 சதவீதமும்; 58 வயதை கடந்த பெண்ணுக்கு 50 சதவீதமும் சலுகை வழங்கப்பட்டு வந்தது.



மூத்த குடிமக்களுக்கான சலுகையை நிறுத்தக்கோரி பல ஆண்டுகளாகவே கோரிக்கைகள் வலுத்து வந்தன. கொரோனா ஊரடங்கின் போது ரயில்வே நிர்வாகம் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. அந்த நேரத்தில், மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரயில்வே நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மூத்த குடிமக்களுக்கான சலுகையை திரும்ப தருமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது தொடர்பாக பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரிலும் கேள்வி கள் எழுப்பப்பட்டன.



latest tamil news


இந்நிலையில், ரயில் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கான சலுகையை பெறுவதற்கான வயது வரம்பை ஆண் - பெண் இருவருக்கும் 70 ஆக உயர்த்த, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சலுகையை குளிர் சாதன வசதி அல்லாத பெட்டிகளுக்கு மட்டும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதோடு, 'பிரீமியம் தத்கல்' டிக்கெட் முன்பதிவு வசதி தற்போது 80 ரயில்களில் மட்டுமே உள்ளது. இதை, அனைத்து ரயில்களிலும் அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.



ரயில்களில் கடைசி நிமிட பயணத்தை திட்டமிடுபவர்களின் வசதிக்காக குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்களை, தத்கல் டிக்கெட் விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வதே, ப்ரீமியம் தத்கல் என அழைக்கப்படுகிறது. இதன் வாயிலாக ரயில்வே நிர்வாகம் அதிக லாபம் ஈட்டி வருகிறது.இந்த சலுகை மாற்றங்கள் குறித்து, ரயில்வே நிர்வாகம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
canchi ravi - Hyderabad,இந்தியா
29-ஜூலை-202200:03:46 IST Report Abuse
canchi ravi யார் சலுகை கொடுக்கச்சொன்னது. யார் எடுக்கச்சொன்னது. குளிர் சாதனப் பெட்டியில் சலுகை இல்லை என்றால் என்ன பிரயோஜனம்? இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் குறைக்கப்போகிறீர்கள். இந்திய ரயில்வே அமெரிக்க வழியில் சென்றால் நல்ல வருமானம். அமெரிக்காவில் சொந்தம் காரில் சென்றால் செலவு குறைவு.
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூலை-202213:50:25 IST Report Abuse
Venugopal S எழுபது வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு ஏசி வசதி இல்லாத இரண்டாம் வகுப்பு முன்பதிவு டிக்கெட்களுக்கு மட்டுமே கன்செஷன் உண்டு.ஆனால் ஏற்கனவே எல்லா ரயில்களிலும் ஏசி வசதி இல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கையை இரண்டு பெட்டிகளாக மட்டும் குறைக்க நடவடிக்கை எடுத்து விட்டார்கள்.இனி சாதாரணமாகவே இரண்டாம் வகுப்பு டிக்கெட் கிடைப்பது கடினம்.பிறகு சீனியர் சிட்டிசன்களுக்கு கிடைக்காத டிக்கெட்டுக்கு என்ன கன்செஷன் கிடைக்கும்? இது ஒரு ஏமாற்று வேலை.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
28-ஜூலை-202213:24:36 IST Report Abuse
Krishnamurthy Venkatesan வயதில் மூத்தவர்கள் நமக்கு இருக்கும் asset என எண்ண வேண்டும். அவர்களுக்கு தரும் சலுகையை பறிக்கவோ குறைக்கவோ கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X